» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக நீதிமன்றங்களில் 2,329 பணி இடங்கள்: இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

செவ்வாய் 30, ஏப்ரல் 2024 10:12:02 AM (IST)

தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக இருக்கும் 2 ஆயிரத்து 329 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு உயர் நீதிமன்றம் மூலம் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணியிடங்களுக்கு https://www.mhc.tn.gov.in என்ற ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த இணையதளத்தில் மாவட்ட வாரியாக நிரப்பப்பட உள்ள பணியிடங்கள் விவரம் மற்றும் எண்ணிக்கை, கல்வித்தகுதிகள், முன்னுரிமைகள் பற்றி விரிவாக கூறப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பதவிகளுக்கு தனித்தனி அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே விண்ணப்பதாரர்கள் தங்களது விருப்பப்படி ஏதாவது ஒரு மாவட்டத்தில் தங்களுக்கு ஏற்ற பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பின்பு, மற்றொரு மாவட்டத்தில் நடைபெறும் தேர்வில் பங்கேற்பதற்கு மாற்றம் செய்ய முடியாது.அதே போல் தேர்வு செய்யப்படுவர்கள் விண்ணப்பித்த மாவட்டத்திலேயே தங்கி பணி செய்ய வேண்டும். எனவே விண்ணப்பதாரர்கள் மிக கவனமாக மாவட்டங்களை தேர்வு செய்ய வேண்டும்.

பணியிடங்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு:-

நகல் பரிசோதகர் -60 பணியிடங்கள், நகல் வாசிப்பாளர் - 11, முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் - 100, இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் - 242, கட்டளை எழுத்தர் - 1, ஒளிப்பட நகல் எடுப்பவர் - 53, டிரைவர்கள் - 27, நகல் பிரிவு உதவியாளர் - 16, அலுவலக உதவியாளர் - 638, தூய்மை பணியாளர் - 202, தோட்ட பணியாளர் - 12, காவலர் - 459, இரவு காவலர் மற்றும் மசால்ஜி - 85, காவலர் மற்றும் மசால்ஜி - 18, தூய்மை பணியாளர் மற்றும் மசால்ஜி- 1, வாட்டர் ஆண் - வாட்டர் பெண் - 2, மசால்ஜி - 402 ஆகும். ஆன்லைன் மூலம் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் (மே) 27-ந் தேதி கடைசி நாளாகும். 

தேர்வு கட்டணத்தை (மே) 29-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும். தேர்வுக்கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். நகல் பரிசோதகர், நகல் வாசிப்பாளர், முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர், இளநிலை கட்டளை நிறைவேற்றுனர், கட்டளை எழுத்தர், ஒளிப்பட நகல் எடுப்பவர் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும். டூவீலர், கார் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

டிரைவர் பணிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 5 ஆண்டுகள் முன் அனுபவம் அவசியம். தூய்மை பணியாளர், தோட்ட பணியாளர், வாட்ச்மேன், மசால்ஜி உள்ளிட்ட பணியிடங்களுக்கு தமிழில் எழுதபடிக்க தெரிந்து இருந்தால் போதும். கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம். வயது வரம்பு, கட்டண சலுகை உள்ளிட்ட விவரங்கள் அறிய https://www.mhc.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். 


மக்கள் கருத்து

கணேஷ் குமார் MApr 30, 2024 - 06:50:23 PM | Posted IP 172.7*****

நன்றி

Ganesh kumarApr 30, 2024 - 06:48:56 PM | Posted IP 172.7*****

Super

MARIMUTHU.PApr 30, 2024 - 01:43:51 PM | Posted IP 172.7*****

Driver

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory