» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு பஸ்- கார் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

புதன் 10, ஏப்ரல் 2024 10:39:28 AM (IST)

காங்கயம் அருகே அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர்  உயிரிழந்தனர். . 

திருப்பூர் நல்லிக்கவுண்டன்நகர் புதுநகர் 7-வது வீதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (60). திருப்பூரில் டையிங் நிறுவனம் நடத்தி வந்தார். இவருடைய மனைவி சித்ரா (57). இவர்களது மூத்த மகன் சசிதரன் (30). இவருக்கு திருமணமாகி விட்டது. மருமகள் ஹரிவி வித்ரா (30), பேத்தி சாக்சி (3 மாதம்). சந்திரசேகரன்-சித்ரா தம்பதியின் இளைய மகன் இளவரசன் (26). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

சந்திரசேகரன்-சித்ரா தம்பதியின் 60-ம் கல்யாணத்தை திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேசுவரர் ேகாவிலில் சிறப்பாக கொண்டாட முடிவு செய்தனர். அதன்படி திருப்பூரில் இருந்து ஒரு காரில் சந்திரசேகரன், சித்ரா, சசிதரன், ஹரிவி வித்ரா, குழந்தை சாக்சி மற்றும் இளவரசன் ஆகியோர் புறப்பட்டு சென்றனர். அங்கு கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து சந்திரசேகரன்-சித்ரா தம்பதியின் 60-ம் கல்யாணத்தை கொண்டாடினர். பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு திருக்கடையூரில் இருந்து திருப்பூருக்கு திரும்பினர்

காரை இளவரசன் ஓட்டினார். இவர்களுடைய கார் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை அடுத்த ஓலப்பாளையம் பகுதியில் நேற்று அதிகாலை 2 மணிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே திருப்பூரில் இருந்து திருச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் காரும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.

இந்த கோர விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கி உருக்குலைந்து போனது. இடிபாடுகளுக்குள் சிக்கி சந்திரசேகரன், இவருடைய மனைவி சித்ரா, மருமகள் ஹரிவி வித்ரா, பேத்தி சாக்சி மற்றும் இளைய மகன் இளவரசன் ஆகியோர் சம்பவ இடத்திலேேய உடல் நசுங்கி பலியானார்கள். சசிதரன் மட்டும் காருக்குள் உயிருக்கு போராடிக்ெகாண்டிருந்தார்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் காங்கயம் துணை போலீ்ஸ் சூப்பிரண்டு பார்த்தீபன், வெள்ளகோவில் இன்ஸ்பெக்டர் ஞானப்பிரகாசம் மற்றும் தீயணைப்பு வீரர்கள், அந்த பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து காருக்குள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சசிதரனை மீட்டு சிகிச்சைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காருக்குள் சிக்கி இறந்தவர்களின் உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணிநேரம் போராடி அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் அரசு பஸ்சை ஓட்டி வந்த கரூர் மாவட்டம் மாணிக்காபுரம் பகுதியை சேர்ந்த சாமிநாதன் (51), கண்டக்டர் கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (53) மற்றும் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினர். சசிதரனுக்கு காங்கயம் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory