» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் ஏப்ரல் 11 ஆம் தேதி ரம்ஜான்: அரசு தலைமை காஜி அறிவிப்பு

செவ்வாய் 9, ஏப்ரல் 2024 8:37:15 PM (IST)

தமிழகத்தில்  ஏப்.11ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் புனித மாதம் ரமலான் மாதம். இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக நோன்பு இருத்தல் கருதப்படுகிறது. இந்த ரமலான் மாதம் பசி, உணவு உள்ளிட்டவற்றை மறந்துவிட்டு தொழுகை, ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதாக உள்ளது. பகலில் உணவு, தண்ணீர் ஏதும் இன்றி மாலையில் இப்தார் உணவுடன் நோன்பை துறப்பது வழக்கம். சூரியன் மறையும் வரை இவர்கள் நோன்பை கடைப்பிடிப்பார்கள். 

நோன்புக்கு முன்பு சஹர் என்ற உணவும், நோன்பிற்கு பிறகு அதாவது முடிக்கும் நேரத்தில் இப்தார் என்றும் அந்த உணவு அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி ரமலான் மாதம் அன்று தொடங்கப்பட்டது. சுமார் 30 நாட்கள் விரதமிருந்த நிலையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். இந்த நிலையில் தமிழகம், புதுவையில் நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 11 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory