» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை-எழும்பூர் இடையே கோடைகால சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே தகவல்!

செவ்வாய் 9, ஏப்ரல் 2024 12:48:09 PM (IST)

கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு வாராந்திர சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இதன்படி ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சென்னை எழும்பூரில் இருந்து வியாழக் கிழமைகளில் மாலை 6.45க்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 8.30க்கு திருநெல்வேலி சென்றடையும். மறுமார்க்கத்தில் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 7 மணிக்கு எழும்பூர் வந்தடையும்

எழும்பூரில் இருந்து விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக இந்த ரயில் நெல்லை சென்றடையும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 



மக்கள் கருத்து

NameApr 9, 2024 - 02:35:36 PM | Posted IP 162.1*****

Normal route la otta mudilana yen spl train vidurenga oruku poganum ilai ora suthi pakka poroma yosichu velai seinga

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory