» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கள் உணவு பொருளாக அறிவிக்கப்படும்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வாக்குறுதி!

வெள்ளி 5, ஏப்ரல் 2024 5:52:06 PM (IST)



சீமை சாராயத்திற்கு முழு தடை விதிக்கப்பட்டு, பனம் பால் (கள்) உணவு பொருளாக அறிவிக்கப்படும் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவீனா ரூத் ஜேன் கூறினார்..

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரொவீனா ரூத் ஜேன் விளாத்திகுளம் பகுதிகளில் கட்சியினர்களுடன் சேர்ந்து தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஈ.சி.ஆர் சாலையில் அமைந்துள்ள பனை தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு சென்று அங்கிருந்த பனைத் தொழிலாளர்களிடம், உங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கூறி நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருக்கும் சீமை சாராயத்திற்கு முழு தடை, பனம் பால் (கள்) மற்றும் தென்னம்பால் (கள்) உள்ளிட்டவற்றை உணவு பொருளாக அறிவிக்கப்படும் என்பதை எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

குளத்தூர், பனையூர், வேப்பலோடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி பரப்புரையில் ஈடுபட்டார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாண்டி, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி செயலாளர் ரமேசுகுமார், மண்டல மகளிரணி செயலாளர்  அன்னலட்சுமி, வடக்கு மாவட்ட தலைவர் செயபாசு, செய்தி தொடர்பாளர் பாலாஜி, மற்றும் கழக நிர்வாகிகள் பலர்  பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory