» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

வெள்ளி 5, ஏப்ரல் 2024 4:15:43 PM (IST)

நெல்லையில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில், கடந்த சில நாட்களாக வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சி பிரமுகர்களின் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை மேற்கொள்கிறார்கள்.

இந்நிலையில், நெல்லை மாவட்டம் என்.ஜி.ஓ காலனியில் வசித்து வரும் நெடுஞ்சாலைத்துறை அரசு ஒப்பந்ததாரர் ஆர்.எஸ்.முருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்.எஸ்.முருகனின் அலுவலகம், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, பண உதவி எதுவும் செய்யப்படுகிறதா என்ற அடிப்படையில் நெல்லை மாவட்டத்தில் பறக்கும் படையினரும், வருமான வரித்துறை அதிகாரிகளும் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory