» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ மத்தியில் ஆட்சி மாற்றம் வேண்டும் : கனிமொழி பிரசாரம்!

செவ்வாய் 26, மார்ச் 2024 8:12:22 AM (IST)



தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டுமென்றால் மத்தியில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. திருச்செந்தூரில் பிரசாரம் செய்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி திருச்செந்தூர் தேரடி திடலில் நேற்று மாலையில் வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் வெறும் அரசியல் வெற்றிக்காக அல்ல. இந்த நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னதை போல் 2-வது சுதந்திரப் போராட்டம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். 

நமது அடையாளங்களை, மொழியை, தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.னதா நாட்டில் இருக்கும் மாநிலங்களின் உரிமைகளை பறிக்கிறது. இந்து மதத்தை இவர்கள் தான் காப்பாற்றுவது போல பேசுகிறார்கள். இவர்களிடமிருந்து இந்து மக்களை காப்பாற்ற வேண்டியது நமது கடமை. விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகளுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்துள்ளனர்.

முதல்-அமைச்சர் ஸ்டாலின் எத்தனையோ புதிய திட்டங்களை தமிழ்நாட்டுக்காக கொண்டு வந்துள்ளார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படுகிறது. பெண்களுக்கு பஸ்சில் கட்டணமில்லா பயண வசதி, கல்லூரியில் படிக்கும் மாணவியருக்கு மாதந்்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ, இந்த நாடு தலைநிமிர எல்லா மக்களும் ஒன்றுபட்டு, ஒற்றுமையாக வாழ வேண்டுமென்றால் மத்தியில் ஆட்சி மாற்றம் வேண்டும். இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். நாடும் நமதாக வேண்டும், நாற்பதும் நமதாக வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.மறவாதீர்கள் உங்களின் சின்னம் உதயசூரியன். உங்கள் பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் அளித்து மீண்டும் உங்களுடன் பணியாற்ற எனக்கு வாய்ப்பு தாருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இதில், தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ஆனந்தமகேஷ்வரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, வர்த்தக அணி மாநில இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், நகராட்சி தலைவர் சிவஆனந்தி, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்ட இந்தியா கூட்டணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory