» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை மக்களவைத் தொகுதி, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு!

திங்கள் 25, மார்ச் 2024 4:29:39 PM (IST)

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக தாரகை கத்பெர்ட் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியும் ஒதுக்கப்பட்டது. முதல்கட்டமாக கடந்த சனிக்கிழமை புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் 7 தொகுதிக்கான வேட்பாளர்கள் பெயர் வெளியிடப்பட்டது. மீதமுள்ள திருநெல்வேலி மக்களவைத் தொகுதி மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பெர்ட் போட்டியிடுகிறார்.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இன்றிரவுக்குள் அறிவிக்கப்படுவார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்

காங்கிரஸ் சார்பில் கரூரில் ஜோதிமணி, விருதுநகரில் மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரியில் விஜய் வசந்த், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory