» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருநெல்வேலி வனக்கோட்டத்தில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் மார்ச் 27ல் ஏலம்!

செவ்வாய் 12, மார்ச் 2024 8:44:27 PM (IST)

திருநெல்வேலி வனக்கோட்டத்தில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட 2 நான்கு சக்கர மகேந்திர ஈப்பு வாகனங்கள் வரும் 27.03.2024 அன்று ஏலம் விடப்படுகிறது.

இது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரினக்காப்பாளர் இரா.முருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரினக்காப்பாளர், திருநெல்வேலி வனக்கோட்டத்தில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட 2 நான்கு சக்கர மகேந்திர ஈப்பு வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 27.03.2024 - ஆம் தேதி காலை 11.00 மணிக்கு மாவட்ட வன அலுவலகம் வளாகத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏலம் எடுக்க விரும்புவோர் தேதி வரை காலை 18.03.2024 முதல் 26.03.2024 வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் பார்வையிட்டு கொள்ளலாம். ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி வாகனத்திற்கு 18% முழுவதையும் அரசுக்கு அன்று ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். 

மேலும், மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரினக் காப்பாளர், திருநெல்வேலி கோட்டம், என்.ஜி.ஓ.’ஏ” காலனி, திருநெல்வேலி-7 தொலைபேசி எண். 0462 2553005 மின்னஞ்சல் முகவரி - [email protected]  தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory