» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மைசூர் - தூத்துக்குடி தீபாவளி சிறப்பு கட்டண ரயில் : தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு

வியாழன் 6, அக்டோபர் 2022 8:40:08 PM (IST)

கர்நாடகாவில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தீபாவளி பண்டிகை  சிறப்பு ரயில்கள் இயக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. 

தீபாவளி பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க பெங்களூரு அருகே உள்ள யெஸ்வந்த்பூர் - திருநெல்வேலி மற்றும் மைசூர் - தூத்துக்குடி இடையே சிறப்பு கட்டண ரயில்களை இயக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.  அதன்படி யெஸ்வந்த்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06565) அக்டோபர் 18 மற்றும் 25 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் யெஸ்வந்த்பூரில் இருந்து மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.30 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். 

மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - யெஸ்வந்த்பூர் சிறப்பு ரயில் (06566) அக்டோபர் 19 மற்றும் 26 ஆகிய புதன்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு யெஸ்வந்த்பூர் சென்று சேரும். இந்த ரயில்கள் பனஸ்வாடி, கார்மேலரம், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப்பெட்டிகள் 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், ஒரு சமையல் பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.

மைசூர் - தூத்துக்குடி சிறப்பு கட்டண ரயில்

மைசூர் தூத்துக்குடி சிறப்பு கட்டண ரயில் (06253) அக்டோபர் 21 அன்று மைசூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.00 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும். மறு மார்க்கத்தில் தூத்துக்குடி - மைசூர் சிறப்பு கட்டண ரயில் (06254) அக்டோபர் 22 அன்று மாலை 03.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.30 மணிக்கு மைசூர் சென்று சேரும். 

இந்த ரயில்கள் யெலியூர், மாண்டியா, பெங்களூர், பெங்களூர் கண்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் இணைக்கப்படும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

NameOct 10, 2022 - 02:06:44 PM | Posted IP 162.1*****

S railway la train otta alukal illaya chennai ku spl vidalaya apuram varumanam ilanu traina stop panurathuku varuvanuga

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory