» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குலசை முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு
வியாழன் 6, அக்டோபர் 2022 8:24:01 AM (IST)
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழாவின் 10ஆவது நாளான நேற்று நள்ளிரவு சூரசம்ஹாரம் நடைபெற்றது.
கா்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்ததாக தசரா திருவிழா தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை அருள்தரும் முத்தாரம்மன் கோயிலில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் 11 நாள்கள் நடைபெறும் இத்திருவிழா, நிகழாண்டு கடந்த செப். 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, காப்பு அணிந்த பக்தா்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனுக்கு காணிக்கை வசூலிக்கத் தொடங்கினா்.
நாள்தோறும் காலை 8 மணிமுதல் இரவு 7.30 மணிவரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு 10 மணிக்கு அம்மன் பல்வேறு திருக்கோலங்களில் வீதியுலா வருதல் ஆகியவை நடைபெற்று வந்தன. விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று நள்ளிரவில் கடற்கரையில் நடைபெற்றது. முன்னதாக இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. பின்னா், பல்வேறு வேடங்களில் வலம் வந்த மகிஷாசூரனை சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அம்மன் வதம் செய்தாா். இதில், லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.
இதைத் தொடா்ந்து, இன்று (வியாழக்கிழமை) பல்வேறு இடங்களில் எழுந்தருளும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெறுகிறது. பின்னா், பூஞ்சப்பரத்தில் வீதியுலா புறப்படும் அம்மன், மாலை 4 மணிக்கு கோயிலை வந்தடைந்ததும் கொடியிறக்கம், காப்புக் களைதல் நடைபெறும். நள்ளிரவு 12 மணிக்கு சோ்க்கை அபிஷேகம் நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அன்புமணி, உதவி ஆணையா் சங்கா், செயல் அலுவலா் ராமசுப்பிரமணியன், கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னை, காஞ்சிபுரம் உள்பட 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!
புதன் 29, நவம்பர் 2023 5:27:57 PM (IST)

விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை: மருத்துவமனை அறிக்கை!
புதன் 29, நவம்பர் 2023 5:24:05 PM (IST)

புழல் ஏரியில் நீர்வரத்து அதிகரிப்பு:கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
புதன் 29, நவம்பர் 2023 5:21:53 PM (IST)

விவசாய நிலம் வாங்குவதற்கு கடனுதவி : ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் தகவல்
புதன் 29, நவம்பர் 2023 12:43:09 PM (IST)

பாஸ் வழங்க அலைக்களிக்கும் நெல்லை அரசு போக்குவரத்து கழகம்
புதன் 29, நவம்பர் 2023 12:25:01 PM (IST)

தென்காசி மாவட்ட அளவிலான செஸ் போட்டி : ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி வெற்றி
புதன் 29, நவம்பர் 2023 12:05:43 PM (IST)
