» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து போராட்டம் : காங்கிரஸ் கட்சிக்கு குஷ்பு சவால்!

வியாழன் 19, மே 2022 5:30:59 PM (IST)

பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து போராட்டம் நடத்தும் காங்கிரஸ் கட்சி, தி.மு.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள தயாரா? என குஷ்பு சவால் விடுத்து உள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு நேற்று விடுதலை செய்தது. இதனை எதிர்த்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது: பேரறிவாளன் விடுதலையான பிறகு முதல்-அமைச்சர் அவரை கட்டி அணைக்கிறார். ஆனால் பாஜக அரசியல் செய்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தி.மு.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள காங்கிரஸ் தயாரா? முதல்-அமைச்சரின் செயலை உங்களால் கண்டிக்க முடியுமா...? முதுகெலும்பற்றவர்களின் செயலாகவே காங்கிரசின் நடவடிக்கை இருக்கிறது. என குஷ்பு கூறி உள்ளார்.


மக்கள் கருத்து

தொல்லைமே 19, 2022 - 08:59:48 PM | Posted IP 162.1*****

ராகுல் , சோனியா அவர்கள் அமைதியாக இருக்கிறார் , அரசியல்வாதிகள் நாட்டுக்கு தொல்லை ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory