» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பைக் மீது மினிபஸ் மோதிய விபத்தில் இளைஞர் பலி!
வியாழன் 11, ஜூன் 2026 7:56:44 AM (IST)
கோவில்பட்டி புதுரோடு சந்திப்பு பகுதியில் பைக் மீது மினிபஸ் மோதிய விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஸ்டாலின் காலனியைச் சேர்ந்தவர் புதியவன் மகன் காளிராஜ் (32). தொழிலாளியான இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் கோவில்பட்டி புதுரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அவர் அங்குள்ள ஆழ்வார்தெரு சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்த போது அவருக்கு முன்னால் ஒரு மினிபஸ் சென்று கொண்டிருந்தது.
அந்தச் மினிபஸ்சை வலதுபுறமாக முந்த காளிராஜ் முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாகச் மினிபஸ், காளிராஜின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தின் தாக்கத்தால் நிலைதடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்த காளிராஜ், மினிபஸ் டயரில் சிக்கித் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இவ்விபத்து குறித்துத் தகவலறிந்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்த காளிராஜின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து மினிபஸ் ஓட்டுநரான கார்த்திக் ராஜா என்பவரைப் போலீசார் பிடித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருமணம் செய்வதாகக் கூறி ரூ.50 லட்சம் மோசடி: இளம்பெண் கைது!
புதன் 24, ஜூன் 2026 10:44:57 AM (IST)

தேசிய ஐஸ் ஹாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கம்: கன்னியாகுமரி மாணவனுக்கு ஆட்சியர் வாழ்த்து!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:15:28 PM (IST)

அகஸ்தீஸ்வரத்தில் மின்சார ரயில் இன்ஜின் பராமரிப்பு தொழிற்கூடம் அமைக்க கோரிக்கை!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:33:50 PM (IST)

மாற்றுத்திறனாளிகளிடம் கனிவுடன் நடக்க வேண்டும் : ஓட்டுநர், நடத்துநர்களுக்கு ஆட்சியர் உத்தரவு!
திங்கள் 22, ஜூன் 2026 8:11:57 PM (IST)

பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்: தோவாளையில் சிறப்பு பிங்க் கிராம சபை கூட்டம்!
சனி 20, ஜூன் 2026 5:47:51 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய ரயில் நிறுத்தங்கள் கிடைக்குமா? பயணிகள் கோரிக்கை!
சனி 20, ஜூன் 2026 3:17:40 PM (IST)



BabuJun 11, 2026 - 09:56:28 AM | Posted IP 172.7*****