» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்டத்தில் பா.ஜனதா பெரும் சரிவு: தி.மு.க. கூட்டணி 5 தொகுதிகளை கைப்பற்றியது!
செவ்வாய் 5, மே 2026 8:56:19 AM (IST)
பாரம்பரியமாகத் தேசியக் கட்சிகளின் கோட்டையாகக் கருதப்படும் கன்னியாகுமரி மாவட்டத்தில், இந்தச் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது:
திமுக - காங்கிரஸ் கூட்டணி (5 தொகுதிகள்): நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு மற்றும் கிள்ளியூர்.
அதிமுக - பா.ஜனதா கூட்டணி (1 தொகுதி): கன்னியாகுமரி.
பொதுவாகக் குமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி கணிசமான வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடிக்கும். ஆனால், இந்தத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வருகை பா.ஜனதாவின் வாக்கு வங்கியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தவெக வேட்பாளர்கள் பா.ஜனதா பெற வேண்டிய வாக்குகளைப் பெருமளவில் பிரித்துள்ளனர். இதன் விளைவாக, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம் உள்ளிட்ட முக்கியத் தொகுதிகளில் பா.ஜனதா 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
அதிமுக வெற்றி பெற்ற கன்னியாகுமரி தொகுதியிலும், திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களுக்குத் தமிழக வெற்றிக் கழகம் பெரும் சவாலாக விளங்கி கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது.
குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் ஆகிய தொகுதிகள் நீண்டகாலமாகத் தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளாக இருந்து வருகின்றன. இருப்பினும், இந்தத் தேர்தலில் மாநிலக் கட்சிகளின் பலமும், குறிப்பாகப் புதிய வரவான தவெக-வின் எழுச்சியும் தேசியக் கட்சிகளின் வெற்றி வாய்ப்பைப் பாதித்துள்ளது நிதர்சனமாகியுள்ளது.
கன்னியாகுமரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட தளவாய் சுந்தரம் 74,904 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் மகேஷை விட 214 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார்.
நாகர்கோவில் தொகுதியில் வெற்றி பெற்ற ஆஸ்டின் 69,880 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட த.வெ.க. வேட்பாளர் பெர்வின் கிங்ஸ்சைவிட 7,570 வாக்குகள் கூடுதலாகும்.
குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட தாரகை கத்பர்ட் 66,207 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பிரேம் அலெக்ஸ் லாரன்சைவிட 2,833 வாக்குகள் பெற்றார்.
பத்மநாபபுரம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் போட்டியிட்ட செல்லசுவாமி 68,938 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட கிருஷ்ணகுமாரைவிட கூடுதலாக 5,569 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட பிரவீன் 69,378 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட த.வெ.க. வேட்பாளர் மைக்கேல் குமாரை விட 20,350 வாக்குகள் அதிகம். கிள்ளியூர் தொகுதியில் போட்டியிட்ட ராஜேஷ்குமார் 66,434 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட த.வெ.க. வேட்பாளர் சபினைவிட 1,311 வாக்குகள் கூடுதலாகும்.
கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி 4 இடங்களையும், அ.தி.மு.க. கூட்டணி 2 இடங்களையும் பிடித்திருந்தன. ஆனால் இந்த முறை நாகர்கோவில் தொகுதியை தி.மு.க. மீண்டும் கைப்பற்றியுள்ளது. இதனால் தி.மு.க. கூட்டணிக்கு இந்த தேர்தலில் ஒரு தொகுதி கூடுதலாக கிடைத்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குருவாயூர் எக்ஸ்பிரஸில் நகை வியாபாரியிடம் 1½ கிலோ தங்க நகைகள் கொள்ளை!
ஞாயிறு 17, மே 2026 11:33:58 AM (IST)

நாகர்கோவில் அருகே நகைக்கடையில் கொள்ளையடித்த 2 பேர் கைது: மேலும் மூவருக்கு போலீஸ் வலைவீச்சு
சனி 16, மே 2026 9:02:22 PM (IST)

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - ஓட்டுநர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்!
சனி 16, மே 2026 4:27:27 PM (IST)

கன்னியாகுமரியில் 'கொங்கு நாடு உணவுத் திருவிழா தொடக்கம்: சுற்றுலாப் பயணிகளுக்கு வரவேற்பு!
வெள்ளி 15, மே 2026 5:47:11 PM (IST)

திற்பரப்பு அருவி பகுதியில் சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் ஆய்வு!
வெள்ளி 15, மே 2026 5:32:10 PM (IST)

விஜய் முதலமைச்சராகத் தாமதமானதால் தீக்குளித்த விபரீதம் : தவெக நிர்வாகி உயிரிழப்பு!
செவ்வாய் 12, மே 2026 11:50:19 AM (IST)


