» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் மகாத்மா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு!
வெள்ளி 30, ஜனவரி 2026 12:43:06 PM (IST)

கன்னியாகுமரியில் காந்தியடிகளின் 79-வது நினைவு தினத்தையொட்டி காந்தி மண்டபத்திலுள்ள அன்னாரது திருவுருவ படத்திற்கு, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், அண்ணல் காந்தியடிகளின் 79-வது நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவப்படத்திற்கு, பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் இன்று (30.01.2026) மலர் தூவி மரியாதை செலுத்தி, தெரிவிக்கையில் "அண்ணல் காந்தியடிகள் , இந்தியாவில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மட்டுமல்லாது, உலக நாடுகளே போற்றுகின்ற வகையில் செயல்பட்டவர்.
இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்த காந்திஜி அவர்களின் பெருமைகளையும், தியாகங்களையும், அன்னாரது அமைதி மார்க்கத்தையும், கொள்கைகளையும், அவரது வழிகாட்டுதலின்படி, நாம் அனைவரும் நம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு செய்வது, அண்ணல் காந்தியடிகள் அவர்களுக்கு மிகவும் பெருமை சேர்ப்பதாகும் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், தமிழ்நாடு மாநில மீனவர் நல வாரிய தலைவர் ஜோசப் ஸ்டாலின், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.எஸ்.காளீஸ்வரி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) எஸ்.செல்வலெட் சுஷ்மா, கன்னியாகுமரி நகர்மன்ற தலைவர் குமரி ஸ்டீபன், கன்னியாகுமரி நகராட்சி ஆணையர் கண்மணி, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் கந்தசாமி, சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய் உதவியுடன் சோதனை!
புதன் 18, மார்ச் 2026 5:36:41 PM (IST)

கன்னியாகுமரி - ஹைதராபாத் ரயிலை விரைவுப் பாதையில் இயக்கக் கோரிக்கை!
புதன் 18, மார்ச் 2026 4:17:42 PM (IST)

குமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படைகள் சோதனை: இதுவரை ரூ.10.18 லட்சம் பறிமுதல்!
புதன் 18, மார்ச் 2026 12:40:24 PM (IST)

கொல்லங்கோடு பத்திரக்காளி அம்மன் கோயில் திருவிழா: மார்ச் 22-ல் மதுபானக் கடைகள் மூட உத்தரவு
புதன் 18, மார்ச் 2026 12:31:24 PM (IST)

குமரி தேர்தல் களம்: 5 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை? விஜய் வருகையால் சவாலா?
செவ்வாய் 17, மார்ச் 2026 11:03:39 AM (IST)

பைக் மீது மோதி ஆற்றுக்குள் பாய்ந்த ஆம்னி பேருந்து: இருவர் உயிரிழப்பு - பயணிகள் மீட்பு!
செவ்வாய் 17, மார்ச் 2026 8:39:43 AM (IST)

