» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி பகவதி அம்மன் கோவில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.1.65 லட்சம் வருவாய்!

வெள்ளி 28, நவம்பர் 2025 10:42:22 AM (IST)

குமரி பகவதி அம்மன் கோவிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.1.65 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. 

உலகப் புகழ்பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைக்கப்பட்டிருந்த அன்னதான உண்டியல், அதிகாரிகள் முன்னிலையில் நேற்று (நவ. 27) திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் ரொக்கம் வசூலாகியுள்ளது. 

நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் ஆனந்தன், மேலாளர் ஆனந்த், மற்றும் ஆய்வாளர் சரஸ்வதி ஆகியோர் முன்னிலையில் இந்த உண்டியல் திறக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory