» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நியாய விலை கடைகளுக்கு புதிய எந்திரங்கள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா வழங்கினார்!

திங்கள் 24, நவம்பர் 2025 5:01:54 PM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட் 149 நியாய விலை கடைகளுக்கு புதிய L1 model PoS இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நியாயவிலைக்கடை விற்பனையாளர்களிடம் வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (24.11.2025) நியாயவிலை கடைகளுக்கு புதிய L1 model PoS இயந்திரங்களை நியாயவிலைக்கடை விற்பனையாளர்களிடம் வழங்கி தெரிவிக்கையில்- கன்னியாகுமரி மாவட்டத்தில் உணவுப் பொருள் வழங்கல் துறையின் கீழ் மேலாண்மை தகவல் அமைப்பு (MIS Report) அறிக்கையின் படி 765 நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகின்றன. 

இதில் 612 முழுநேர நியாய விலைகடைகளும், 153 பகுதிநேர நியாயவிலைகடைகளும் அடங்கும். நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சரியான எடையில் பொருட்கள் கிடைக்கும் வகையில் நியாய விலை கடைகளில் உள்ள விற்பனை முனைய (PoS) இயந்திரத்தில் இணைக்கப்பட்டிருக்கும் கைரேகை பதிவு சாதனத்தின் (Bio metric device) மூலம் விரல் ரேகை பதிவு செய்து ஆதார் சரிபார்ப்பு முறையில் சரிபார்க்கப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்ய தமிழ்நாடு அரசால் உத்தரவிடப்பட்டதைத்தொடர்ந்து, தற்போது Bio metric முறையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

கைரேகை சரிவர பதியாத பயனாளிகளுக்கு கருவிழி ஸ்கேனர் மூலம் ஆதார் சரிபார்க்கப்பட்டு பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. ஜூன் மாதம் முதல் PoS இயந்திரத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த கைரேகை பதிவு செய்யும் Lo (L Zero) மாடல் பயோமெட்ரிக் சாதனத்தை ஆதார் அடிப்படையிலான பாதுகாப்பு, வேகம் மற்றும் துல்லியத்தை மேம்படுத்தும் விதமாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) முடக்கியது. அதற்குப் பதிலாக L1 (L One) மாடல் பயோமெட்ரிக் சாதனத்தை கைரேகை பதிவிற்கு மாற்றியது.

இதனால் ஏற்பட்ட L1 model biometric இயந்திரங்கள் பற்றாக்குறை காரணமாக ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்த L0 சாதனங்கள் மூலம் பகுதிநேர நியாய விலைக் கடைகளில் பொருட்கள் விநியோகம் செய்ய இயலாத நிலையினால் பகுதிநேர கடைகளில் அதன் முழுநேர தாய் கடைகளில் உபயோகப்படுத்தப்படும் L1 மாடல் பயோமெட்ரிக் இணைக்கப்பட்ட PoS இயந்திரத்தினை பகுதி நேர கடைகளுக்கான வேலை நாட்களில் பகுதிநேர கடைகளுக்கான தரவுகள் வட்ட பொறியாளர்கள் மூலம் மேப்பிங் செய்யப்பட்டு விற்பனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

அதாவது ஒரே ஒரு PoS இயந்திரம் மூலம் இரண்டு கடைகளுக்கு (தாய் கடை மற்றும் பகுதி நேர கடை) விற்பனை நடைபெற்று வந்தது. இதனால் ஏற்பட்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு தற்சமயம் தமிழ்நாடு அரசால் பகுதிநேர கடைகளுக்கு புதிய L1 model PoS இயந்திரம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு, முதற்கட்டமாக 149 நியாய விலை கடைகளுக்கு இன்று புதிய PoS இயந்திரம் வழங்கப்பட உள்ளது. 

இதன் மூலம் பொதுமக்களுக்கு காலதாமதமின்றி பொருட்கள் கிடைக்க ஏதுவாகும் என்பதோடு நியாய விலைக் கடை விற்பனையாளர்களுக்கும் இது அவர்களது பணியை எளிதாக்கும் என்று தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.பூங்கோதை, உதவி ஆட்சியர் பயிற்சி ராகுல்குமார், தனித்துணை ஆட்சியர் சேக்அப்துல் காதர், மாவட்ட வழங்கல் அலுவலர் புஷ்பாதேவி, துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory