» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சாலையில் கிடந்த பர்சை உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறை அதிகாரிக்கு பாராட்டுக்கள் குவிகிறது..!

செவ்வாய் 11, நவம்பர் 2025 3:30:51 PM (IST)



ஆசாரிப்பள்ளம் பகுதியில் சாலையில் கிடந்த மணி பர்சை உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறை அதிகாரியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் டெரிக் சந்திப்பு செல்லும் சாலை இடையே உள்ள வழியில் யாரோ நபர் தவறவிட்ட மணிபர்ஸ் கிடந்துள்ளது இதனை வெள்ளிசந்தை காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்  என். ராமகிருஷ்ணன் பணிமுடிந்து வீடு திரும்பிய போது கவனித்துள்ளார். உடனடியாக அந்த மணி பர்சை மீட்டு சோதனை செய்ததில் ரூ22,000 மற்றும் ஏ.டி.எம் கார்டு, 2 பேன் கார்டு, ஆர்சி புக்,ஒரிஜினல் டிரைவிங் லைசன்ஸ் ஆகியவை இருந்துள்ளது. 

உடனே பர்ஸில் இருந்த ஓட்டுநர் லைசன்ஸ் முகவரி நபரை தொடர்பு கொண்டு,நேரில் அழைத்து தவறவிட்ட மணிபர்ஸை வழங்கினார். மணி பர்ஸை தவறவிட்ட நபர் மற்றும் அவரது தாய் போலீசிடம் மணிபர்ஸை பெற்று கொண்டு நன்றி தெரிவித்து சென்றனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காவல் உதவி ஆய்வாளரை பலரும் பாராட்டி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory