» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வாக்குரிமையை பாதுகாக்க வேண்டியது நம் கடமை: விஜய் வசந்த் எம்.பி அறிக்கை

செவ்வாய் 4, நவம்பர் 2025 9:25:05 PM (IST)

தேர்தல் ஆணையம் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தொடங்கியுள்ளது. இந்நேரத்தில் நமது வாக்குரிமையை பாதுகாப்பதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தொடங்கியுள்ளது. இந்த பணியின் போது வாக்காளர்களாகிய நமது கவன குறைவால் நமது வாக்குகளை பறி கொடுத்து விடக்கூடாது. வாக்குரிமை என்பது நமது ஜனநாயக அடையாளம். அதை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரது கடமை.

உங்கள் பாகத்தில் இந்த சிறப்பு பணிக்கென நியமிக்கப்பட்டுள்ள வாக்கு சாவடி நிலை அலுவலர் உங்கள் இல்லங்களுக்கு வந்து உங்கள் வீட்டில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கான படிவங்களை உங்களுக்கு அளிப்பார்கள். இரண்டு பிரதிகளை கொண்ட இந்த படிவத்தை சரிபார்த்து, தேவையான விவரங்களை எழுதி அதை அந்த தேர்தல் அலுவரிடம் ஒப்படைக்க வேண்டும். 

உங்கள் புதிய புகைப்படம் மற்றும் தொலைபேசி எண்ணை சேர்த்து கொள்ளுங்கள். அதில் ஒரு நகலில் அலுவலரின் கையொப்பம் பெற்று அதை பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும். வாக்களர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்த போதிலும் உங்களுக்கு இந்த படிவம் வழங்கப்படவில்லை என்றாலோ, உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர் கொண்ட படிவம் வழங்கப்படவில்லை என்றாலோ உடனடியாக சிறப்பு தேர்தல் பணியாளரிடம் இதை தெரிவிக்கவும்.

பீகார் மாநிலத்தில் லட்சகணக்கான வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்கியதை நாம் அறிவோம். நமது மாநிலத்தில் அவ்வாறு நடக்காமல் நாம் இணைந்து பங்களிப்போம். காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் அனைவரும் தங்கள் வாக்கு சாவடிக்கு உட்பட்ட இல்லங்களுக்கு சென்று பொது மக்களுக்கு படிவங்களை பூர்த்தி செய்யவும், அவர்கள் தெரிவிக்கும் புகார்களை நிவர்த்தி செய்யவும் ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory