» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

திங்கள் 3, நவம்பர் 2025 8:19:38 PM (IST)



வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கு அருகில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (03.11.2025) வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை துவக்கி வைத்து தெரிவிக்கையில்-

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், பத்மநாபபுரம் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்காளர்களின் வீடுகளுக்கு நாளை (04.11.2025) முதல் 3 தினங்களுக்குள் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) வாக்காளர்களாகிய உங்களை வீடு வீடாக சந்தித்து கணக்கெடுப்புப் படிவம் (Enumeration Form) 2 படிவம் வழங்க உள்ளார்கள். 

வாக்காளர் பட்டியல்களில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் குடும்ப உறவுமுறைகளை தரவு அடிப்படையில் முந்தைய 2002 சிறப்பு தீவிரத் திருத்தப் பதிவுருக்களுடன், நடப்பு 2025 மின்னணு வாக்காளர் பட்டியலுடன் (2025) வாக்காளர்களால் சரிபார்க்கப்பட வேண்டும். அவ்வாறு சரிபார்க்கப்பட்ட பின், கணக்கெடுப்பு படிவத்தினை பூர்த்தி செய்து, நவம்பர் 20-ம் தேதிக்குள் வாக்காளர்கள் தங்களின் சமீபத்திய வண்ணப் புகைப்படங்களை (coloured photographs) இணைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்காக வழங்கப்படும் கணக்கெடுப்பு படிவத்தை 2002-பட்டியலுடன் பூர்த்தி செய்து, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் வாக்குச்சாவடி முகவர்களிடம் (BLA) முறையாக கையொப்பம் பெற்றுக்கொண்டு வழங்க வேண்டும். 

இவ்வாறு திரும்ப வழங்காத வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க வாய்ப்பு உள்ளது. எனவே வாக்காளர்களாகிய நீங்கள், உங்களை நாடி வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு அளிக்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மேலும் சிறப்பு தீவிர திருத்தம் கன்னியாகுமரி மாவட்டத்தில் முழுவதும் சரியாக நடைபெற்றிட கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, இணை பதிவாளர் சிவகாமி, தனித்துணை ஆட்சியர் சேக் அப்துல் காதர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், துறை அலுவலர்கள், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory