» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சார் பதிவாளர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயற்சி : அரசு அலுவலகத்தில் பரபரப்பு!!
சனி 7, டிசம்பர் 2024 4:08:16 PM (IST)

குமரி மாவட்டம் கருங்கலில் அரசு அலுவலகத்தில் வைத்து சார் பதிவாளர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே சுண்டவிளை பகுதியை சேர்ந்த ஜெஸ்டஸ் மார்ட்டின் என்பவர், தனது சகோதரரிடம் இருந்து நிலத்தை விலைக்கு வாங்கி அதனை பதிவு செய்ய கருங்கல் சார்பதிவாளர் சென்றுள்ளார். எனினும், சார் பதிவாளர் ஹரிகிருஷ்ணன் பத்திரப்பதிவு செய்யாமல், திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.
மீண்டும் சார் பதிவாளரிடம் முறையிட்ட நிலையில், மீண்டும் அதிகாரி மறுக்கவே ஆத்திரமடைந்த ஜெஸ்டஸ் மார்ட்டின், தண்ணீர் பாட்டிலில் தான் மறைத்து கொண்டு வந்த பெட்ரோலை தன் மீது, சார் பதிவாளர் மற்றும் ஊழியர்கள் மீதும் ஊற்றி தீ வைத்து எரிக்க முயன்றார். நல்வாய்ப்பாக தீபற்றாத நிலையில், அதிர்ந்து போன ஊழியர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து ஜெஸ்டஸ் மார்ட்டினை போலீசார் கைது செய்த நிலையில், இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜஸ்டஸ் மார்ட்டின் சார் பதிவாளர் அலுவலகத்தில் சென்று அதிகாரிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்ற சம்பவம் குறித்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகாரின் அடிப்படையில் கருங்கல் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் விசாரணை நடத்தி ஜஸ்டஸ் மார்ட்டின் மீது வழக்குப்பதிவு செய்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)

இணையதளம் மூலமாக மட்டுமே சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் : ஆட்சியர் தகவல்
திங்கள் 30, ஜூன் 2025 12:19:27 PM (IST)

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்
ஞாயிறு 29, ஜூன் 2025 11:28:11 AM (IST)
