» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழை : குளங்கள், தடுப்பணைகளில் எஸ்.பி., ஆய்வு!

செவ்வாய் 26, நவம்பர் 2024 8:54:39 PM (IST)



வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு குளங்கள், தடுப்பணைகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை ஆங்காங்கே மழை பெய்து வருவதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவுப்படி தொடர் மழை, வெள்ளம் மற்றும் புயல் ஆகியவற்றால் பாதிப்பு ஏற்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய இடங்களில் பேரிடர் மீட்பு படை குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இன்று (26.11.2024) தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக வெள்ள பாதிப்புகள் ஏற்படக்கூடிய பகுதிகளான, கோரம்பள்ளம் மற்றும் சிவகளை உட்பட தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு குளங்கள், தடுப்பணைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேரில் சென்று பார்வையிட்டு குளத்தின் கொள்ளளவு மற்றும் நீர் இருப்பு குறித்து கேட்டறிந்து, குளத்தின் கரைகள் பாதுகாப்பாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு, காவல்துறையினருக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கினார்.


மக்கள் கருத்து

IndianNov 28, 2024 - 03:36:39 PM | Posted IP 172.7*****

It is a good move by the SP. There must be constant supervision by the Higher District authorities on the ground level situation.Both the District Collector and SP are good officers for Tuticorin District.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory