» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
விடுமுறை தினம் எதிரொலி: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஞாயிறு 29, செப்டம்பர் 2024 12:40:38 PM (IST)
கன்னியாகுமரியில் ஞாயிறு விடுமுறையையொட்டி இன்று காலையில் இருந்தே பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள்.
இந்தநிலையில் இன்று ஞாயிறு விடுமுறையையொட்டி காலையில் இருந்தே கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை, சன்ரைஸ் பாயின்ட் போன்ற பகுதிகளில் நள்ளிரவு முதல் காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.
அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். படகுத்துறையில் இருந்து சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர். காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள தமிழன்னை பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.
கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வெள்ள அபாய அளவை எட்டிய பேச்சிப்பாறை அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
வெள்ளி 24, அக்டோபர் 2025 5:36:20 PM (IST)

குடிநீரின் குளோரினேஷன் அளவு : ஆட்சியர் ஆய்வு!
வியாழன் 23, அக்டோபர் 2025 5:50:06 PM (IST)

குமரி மாவட்ட முதல்வர் மருந்தக சேமிப்பு குடோனில் ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
வியாழன் 23, அக்டோபர் 2025 11:06:33 AM (IST)

நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் : காவல் துறை அழைப்பு!
புதன் 22, அக்டோபர் 2025 3:36:41 PM (IST)

தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: நெல்லை, தூத்துக்குடி, குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 4:56:25 PM (IST)

இந்திய விண்வெளி மையம் 2035-ம் ஆண்டு நிறுவப்படும் : இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
திங்கள் 20, அக்டோபர் 2025 9:46:32 AM (IST)


.gif)