» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குடிபோதையில் வாகனம் ஓட்டிய 2பேர் மீது வழக்கு: 2 ஆட்டோக்கள் பறிமுதல்!
சனி 28, செப்டம்பர் 2024 5:47:23 PM (IST)

நாகர்கோவிலில் குடிபோதையில் ஆட்டோ ஓட்டிய 2 டிரைவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித்குமார் மேற்பார்வையில், நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறையினர் வேப்பமூடு மற்றும் புன்னை நகர் பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, கணபதிபுரத்தைச் சேர்ந்த கணேஷ்குமார், திக்கணங்கோட்டைச் சேர்ந்த ஜெயபாலன் ஆகியோர் ஓட்டி வந்த ஆட்டோக்களை சோதனை செய்த போது இருவரும் குடிபோதையில், ஆட்டோ இயக்கியது தெரியவந்தது. பின்னர் இருவரையும் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து குடிபோதை வழக்கு பதிவு செய்யப்பட்டு இரண்டு ஆட்டோ வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்களுக்கு, நீதிமன்றம் மூலமாக தலா ரூ.10000 அபராதம் விதிக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உண்டியலை உடைத்தபோது கருவறையில் இருந்து சத்தம் கேட்டதால் கொள்ளையன் ஓட்டம்!!
ஞாயிறு 9, நவம்பர் 2025 9:30:20 AM (IST)

குமரியில் கொட்டி தீர்த்த மழையால் பயிர் நடவு பணி தீவிரம் : விவசாயிகள் மகிழ்ச்சி!
சனி 8, நவம்பர் 2025 11:49:34 AM (IST)

குமரி கடற்கரையில் 50- க்கும் மேற்பட்ட நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
வெள்ளி 7, நவம்பர் 2025 4:58:48 PM (IST)

ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது
வெள்ளி 7, நவம்பர் 2025 4:56:19 PM (IST)

ஐப்பசி பௌர்ணமி: கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி!
வியாழன் 6, நவம்பர் 2025 3:42:47 PM (IST)

இயற்கையைக் காப்போம்: கன்னியாகுமரி முதல் சென்னை வரை மிதிவண்டிப் பேரணி!
வியாழன் 6, நவம்பர் 2025 3:15:35 PM (IST)


.gif)