» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் இருந்து சுற்றுலா சென்ற பஸ் விபத்து : 15 மாணவர்கள் உட்பட 17பேர் காயம்!

சனி 28, செப்டம்பர் 2024 11:18:46 AM (IST)



குமரியிலிருந்து சுற்றுலா சென்ற பேருந்து தேனி அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட 17 பேர் காயம் அடைந்தனர். 

கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு பகுதியில் செயல்படும் தனியார் மெட்ரிக் பள்ளியில் இருந்து 90-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை அழைத்துக் கொண்டு, தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தளங்களுக்கு 2 சுற்றுலா பேருந்துகள் சென்றுள்ளன.

அதில் ஒரு பேருந்து தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள குன்னூர் பகுதியில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்த போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 15 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கானாவிளக்கு காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து கானாவிளக்கு காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை எற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory