» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி வெள்ளத்தின் போது கனிமொழி எம்.பி., எங்கே சென்றார்? வானதி சீனிவாசன்
புதன் 31, ஜூலை 2024 9:21:55 PM (IST)

தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது கனிமொழி எம்.பி., எங்கே சென்றார் என பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி தேசியத்தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசின் பட்ஜெட்டில் மகளிர் நலன் குறித்த கருத்தரங்கம் தூத்துக்குடி டி.எஸ்.எஃப்.ஹோட்டலில் வைத்து நடைபெற்றது. இதில், பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி தேசியத்தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாரத பிரதமர் மோடி 3வது முறையாக சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களுக்கும் நேரடியாக சென்றடையும் வகையில் அமைந்துள்ளது. பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் பெயர் குறிப்பிடவில்லை என்பதால் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என்பதில்லை. முத்ரா கடன் திட்டத்தில் மற்ற மாநிலங்களைவிட எண்ணற்ற ஏழை பெண்கள் பயனடைந்துள்ளனர்.
பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா பொருளாதாரத்தில் 5வது வளரும் நாடாக திகழ்கிறது. திமுக ஆட்சியில் தங்களது குறைகளை மறைப்பதற்காக பிரதமர் மீது பொய்க்குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். தமிழகத்திற்கு வெள்ள நிவாரன நிதி அளிக்கவில்லை என்று கூறுகின்றனர். ஏற்கனவே மத்திய அரசு தமிழக அரசிற்கு கொடுத்த பணத்திற்கு கண்க்கு சொல்ல மறுக்கின்றனர். தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது இங்குள்ள மக்களின் உயிர்களை காப்பாற்ற ராணுவ ஹெலிகாப்டர்களை அனுப்பி பொருட்களையும் வழங்கி மக்களை மீட்க ஏற்பாடு செய்தது நமது நிதியமைச்சர் தான். அப்போது கனிமொழி எங்கே சென்றார் என்று தெரியவில்லை என்றார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாநில பொதுச்செயலாளர் பொன்பாலகணபதி, ஒபிசி அணி மாநில துணைதலைவர் விவேகம் ரமேஷ், மகளிர் அணி மாநில பொதுச்செயலாளர் நெல்லையம்மாள், மகளிர் அணி மாவட்டதலைவர் தேன்மொழி, மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா, மாவட்டபொருளாளர் சண்முகசுந்தரம், மாவட்ட துணை தலைவர்கள் சிவராமன், சரஸ்வதி, மாவட்ட செயலாளர்கள் வீரமணி, கணல் ஆறுமுகம், ராஜபுணிதா, கல்வியாளர் பிரிவு மாவட்ட துனை தலைவர் சுதா, அழகர் பப்ளிக் பள்ளி தாளாளர் பிரியதர்ஷனி, பெண்தொழில் முனைவோர் கவிதா, ஆசை ஆரம்ப மற்றும் தொடக்கபள்ளி தாளாளர் சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
VANTHIAug 1, 2024 - 10:00:19 AM | Posted IP 162.1*****
"nee enna ma oru loossu"
சாம்Jul 31, 2024 - 11:25:00 PM | Posted IP 172.7*****
முத்ரா கடன் திட்டத்தில் தமிழ்நாடு மக்கள் கடன் வாங்கியது எவ்வளவு பெருமையாக சொல்லுகிறார்கள் ஐயா எங்கள் கடனாளி ஆகிட்டு இது ஒரு பெருமையா அது மட்டுமல்ல எங்க அக்கா களத்துல நின்னு அவ்வளவு பார்த்தாங்க போறார் நாங்க எல்லாம் செஞ்சாங்க தெரியாம எதுவும் பேசாதீங்க ஏதாவது பேசணும் அப்படிங்கிற கண்டிஷன் உங்களுக்கு யாரு தப்பான தகவல் தந்து இருக்காங்க வெள்ளத்துல பாதிக்கப்பட்ட மக்களிடம் போய் கேளுங்க கனிமொழிக்கா எங்க இருந்தாங்க கீதா அக்கா எங்க இருந்தாங்க
BalaJul 31, 2024 - 11:10:27 PM | Posted IP 172.7*****
Yemma avangalam ingadan irunthaanga.. neenga yenga poneenga?
உண்மை விளம்பிJul 31, 2024 - 10:44:55 PM | Posted IP 172.7*****
சும்மா வாய்க்கு வந்த மாதிரி பேச கூடாது. தூ.டி வெள்ளத்தின் போது கனிமொழி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவருடன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்தார். ஆனாலும் அவருக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. நிதியமைச்சர் ஓர் மத்திய அமைச்சர் என்பதால் அவருக்கே அதி முக்கியத்துவம் தரப்பட்டது. ஸ்ரீவைகுண்டம் ஊரில் மழையின் போது ரெயின் கோர்ட் அணிந்து கொண்டு மோட்டார் பைக் பின் அமர்ந்து நேரிடையாக வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்தார். நல பணிகளை நேரில் பார்வையிட்டார்.
KumarJul 31, 2024 - 09:32:01 PM | Posted IP 162.1*****
அந்த அம்மா இங்குதான் இருந்தார் நீங்கள் இவ்வளவு நாள் எங்கு போனீர்கள்?
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய பேருந்து சேவை : அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
ஞாயிறு 6, ஜூலை 2025 10:46:20 AM (IST)

பிரசவித்த பின் குழந்தைகளின் செவித்திறன்களை நன்கு ஆராய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
சனி 5, ஜூலை 2025 12:41:12 PM (IST)

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம் : தாய் புகார் - போலீஸ் விசாரணை!!
சனி 5, ஜூலை 2025 10:48:06 AM (IST)

இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வெள்ளி 4, ஜூலை 2025 5:36:19 PM (IST)

கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வெள்ளி 4, ஜூலை 2025 10:40:08 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)

vanathiAug 1, 2024 - 12:39:11 PM | Posted IP 162.1*****