» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தாமிரபரணி நதியில் எத்தனை அணைக்கட்டு உள்ளது : ஆர்டிஐ பதிலால் விவசாயிகள் குமுறல்!

சனி 18, மே 2024 3:24:47 PM (IST)

தாமிரபரணி நதியில் எத்தனை அணைக்கட்டு உள்ளது என்பது குறித்து தகவல் இல்லை என்று ஆர்டிஐ பதில் அளித்துள்ளது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாமிரபரணி நதி குறித்து புத்தகம் எழுதியவர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு. தற்போது இவர் மதுரை உயர் நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கினால் தாமிரபரணியை சாக்கடை இல்லாத நதியாக மாற்ற மாநகராட்சியினருக்கு நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதற்கிடையில் கடந்த டிசம்பர் 2023 ல் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பல இடங்களில் கரை உடைந்தது. இந்த கரையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார்.

இதற்கிடையில் தாமிரபரணி வடிநில கோட்ட துணை கண்காணிப்பு பொறியாளரிடம் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் சில கேள்விகள் கேட்டிருந்தார் . அதில் தாமிரபரணி ஆற்றில் எத்தனை அணைகள் உள்ளது. கால்வாய் மதகுகள் எத்தனை உள்ளது. டிசம்பர் 2023 மழை வெள்ளத்தில் தாமிபரணி ஆற்றங்கரையில் எத்தனை இடத்தில் உடைப்பு ஏற்பட்டது என்பது போன்ற தகவல்களை கேட்டிருந்தார். இது குறித்து தகவல் கொடுக்க தாமிரபரணி வடி நில வட்ட துணை கண்காணிப்பு பொறியாளர் சிற்றாறு வடி நில கோட்ட வரை தொழில் அலுவலரை நியமனம் செய்தார். இவர் மே மாதம் 3 ந்தேதி எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பதில் அனுப்பியுள்ளார்.

அதில் தாமிரபரணி நதியில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் அணைகட்டுக்கள் எத்தனை உள்ளது, கால்வாய் மதகு எத்தனை உள்ளது என்பது குறித்து இவ்வலுவலக கோப்பில் தகவல்கள் இல்லை என பதிலளித்துள்ளார். மேலும் டிசம்பர் 2023 ல் நடந்த வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் கரைகள் உடைந்த குறிப்புகளும் இந்த அலுவலக கோப்பில் இல்லை என பதிலளித்துள்ளார்.

இந்த கடிதத்தின் பார்த்தவுடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு , மற்றும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, நான் கடந்த 25 வருட காலமாக தாமிரபரணி ஆற்றை பற்றி எழுதி வருகிறேன். பொதுப்பணித்துறையினர் இந்த 25 வருடங்களில் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, ஒவ்வொரு பணியையும் மந்தமாக செய்து வருகின்றனர். அணைக்கட்டில் உள்ள ஷட்டர் பராமரித்தல், மடைகளை பராமரித்தல், கரைகளை சீரமைத்தல் போன்ற எந்த பணிகளையும் முறையாக செய்ய வில்லை. 

எனவே அவர்கள் என்னென்ன பணிகள் செய்து கொண்டிருக்கிறார்கள் என அறிய விரும்பினோம். எனவே முதற்கட்டமாக தகவல் உரிமை சட்டம் மூலமாக தாமிரபரணியில் எத்தனை அணைக்கட்டு உள்ளது, மடை உள்ளது, கால்வாய் உள்ளது, டிசம்பர் 2023 ல் மழை வெள்ளத்தில் எத்தனை இடங்களில் கரை உடைக்கப்பட்டது என கேள்வி கேட்டிருந்தோம்.

ஆனால் அவர்கள் இதற்கெல்லாம் ஒரே பதிலாக இதுகுறித்து எங்கள் அலுவலக கோப்புகளில் தகவல் இல்லை என கூறிவிட்டார்கள். பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தாமிரபரணி வடி நில கோட்டத்தில் லட்சகணக்கில் அரசு சம்பளம் கொடுத்து வருகிறது. இவர்கள் தாங்கள் வேலை செய்யும் தாமிரபரணி ஆற்றில் எத்தனை இடத்தில் அணைக்கட்டு இருக்கிறது என்ற தகவல் கூட தெரியவில்லை என கூறிவிட்டனர். அப்படியென்றால் இவர்கள் எப்படி விவசாயத்துக்கு தண்ணீர் கொடுப்பார்கள். 

நதியை நம்பியிருக்கும் மக்களை காப்பாற்றுவார்கள். எத்தனை இடத்தில் உடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்று கூட தெரியாமல் இருப்பவர்கள், தற்போது தாமிரபரணி திட்ட அறிக்கையை எப்படி அரசுக்கு எழுதி அனுப்பினார்கள் என்பது கேள்வி குறியாக உள்ளது. அப்படியென்றால் இதுவரை மழை வெள்ளத்தில் உடைந்த கரைக்கும் பொதுப்பணித்துறையினர் எந்த நடவடிக்கை எடுக்க வில்லை என்பதும் தெரியவருகிறது.

உண்மையிலேயே பொதுப்பணித்துறை ஆவணத்தில் அணைக்கட்டு, கால்வாய், மதகுபோன்ற குறிப்பு இல்லையா? அல்லது பொதுப்பணித்துறை அதிகாரியின் அலட்சியத்தினால் இந்த பதில் வந்திருக்கிறதா என சந்தேகமாக இருக்கிறது. எனவே இதற்கு முறையான பதிலை உடனடியாக தாமிரபரணி வடிநில கோட்ட பொறியாளர் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.

மிகவும் பழமையான தாமிரபரணியில் எத்தனை அணைக்கட்டு கூட இல்லை என அலட்சியமாக பதில் கூறிய பொதுப்பணித்துறையினர் வருங்காலத்தில் எப்படி தாமிரபரணி விவசாயிகளுக்கு தண்ணீர் கொடுப்பார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

KARNARAJமே 19, 2024 - 09:42:51 AM | Posted IP 172.7*****

Government and Government officers should be dedicated and work for pupils or state improvement. Getting high salaries and working for their own and politician's benefits are to be stopped.

நெல்லை வேல்முருகன் இவருக்கு அரசு வழங்கும் சம்பளம் தெண்டம் ஆகவே இவரை நிரந்தரமாக வேலையைவேலையை�மே 19, 2024 - 05:52:20 AM | Posted IP 162.1*****

இவருக்கு அரசு வழங்கும் சம்பளம் தெண்டம் ஆகவே இவரை நிரந்தரமாக வேலையைவேலையைவிட்டு நீக்கவேண்டும் நெல்லை வேல்முருகன்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory