» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி பக்கிள் ஓடையில் அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு

வெள்ளி 17, மே 2024 9:59:52 AM (IST)



கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தூத்துக்குடி பக்கிள் ஓடையில் அடைப்புகளை சரிசெய்யும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார்.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கையாக ஆரஞ்ச் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் வடிகால்களை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மழைநீரை வெளியேற்றும் பிரதான கால்வாயாக உள்ள பக்கிள் ஓடையில் உள்ள அடைப்புகளை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. 

இதனை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார். இதேபோன்று கரிக்களம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணியையும் அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார். அப்போது மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர் எடின்டா, திரேஸ்புரம் பகுதி இளைஞரணி ராஜா மற்றும் மணி, அல்பர்ட் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

கந்தசாமிமே 18, 2024 - 05:27:21 AM | Posted IP 162.1*****

ஓடையை சுருக்கி கால்வாயாக மாற்றியாகி விட்டாச்சி இனி என்ன அழுதாலும் பிரயோஜனம் இல்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory