» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருச்சி கோட்டத்தில் புதிய ரயில்கள் அறிவிப்பு பரிதாப நிலையில் குமரி மாவட்டம்!

திங்கள் 29, ஏப்ரல் 2024 11:36:13 AM (IST)

கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் பயன்படும் வகையில் புதிய ரயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

திருச்சி கோட்டத்தில் பரிந்துரையின் பெயரில் தெற்கு ரயில்வே அனுமதியோடு ரயில்வே வாரியம்  ஆறு பயணிகள் ரயில்கள் நீட்டிப்பும் ஒரு புதிய வழித்தடத்தில் பயணிகள் ரயில் சேவையில் புதிதாக அறிவிக்கப்பட்ட இயக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்- மயிலாடுதுறை ரயில் திருவாரூர் வரை நீட்டிப்பு

சென்னை பீச் - வேலூர் ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு

விருத்தாசலம் - திருச்சி ரயில் விழுப்புரம் வரை நீட்டிப்பு

சேலம் - விருத்தாசலம் ரயில் கடலூர் துறைமுகம் வரை நீட்டிப்பு

திருச்சி – தஞ்சாவூர் ரயில் திருவாரூர் வரை நீட்டிப்பு

திருத்துறைப்பூண்டி – அகஸ்தியன்பள்ளி ரயில்வே திருவாரூர் வரை நீட்டிப்பு

திருவாரூர் - பட்டுக்கோட்டை புதிய ரயில் சேவை

என மொத்தம் ஏழு ரயில்கள் புதிதாக சேவை துவங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு மதுரை கோட்டத்தில் திருநெல்வேலி மற்றும் தென்காசி செங்கோட்டை மையமாக வைத்து பல்வேறு புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மதுரை மற்றும் திருச்சி கோட்டங்களில் புதிய ரயில்கள் இயக்கியது  போன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய ரயில் சேவைகள் இயக்க வேண்டும் என்று குமரி மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு உள்ளனர்

தெற்கு ரயில்வே மண்டலத்தில் கீழ் உள்ள இரண்டு கோட்டங்களில் இவ்வாறு அதிக அளவில் புதிய ரயில்கள் அதிலும் குறிப்பாக குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யும் பயணிகள் வசதிக்காக பயணிகள் ரயில் சேவைகள் தொடங்கப்படும் போது அதே தெற்கு ரயில்வே கீழ் உள்ள திருவனந்தபுரம் கோட்டத்தில் கீழ் உள்ள கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் பயன்படும் படியாக எந்த ஒரு பயணிகள் ரயில் சேவையும் இதுவரை கடந்த 10 ஆண்டுகளாக அறிவிக்கப்படவில்லை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் திருநெல்வேலி, செங்கோட்டை மையமாக வைத்து அறிவிக்கப்பட்ட புதிய ரயில்கள் விபரம்

1. விழுப்புரம் - புருலியா வாரம் இருமுறை ரயில் திருநெல்வேலி வரை நீட்டிப்பு

2. கொல்லம் - சென்னை எழும்பூர் தினசரி வழி செங்கோட்டை

3. திருநெல்வேலி -பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் வழி செங்கோட்டை

4. செங்கோட்டை - தாம்பரம் வழி திருநெல்வேலி வாரம் மூன்று முறை ரயில்

5. செங்கோட்டை - மதுரை மற்றும் திண்டுக்கல் - மயிலாடுதுறை ரயிலை இணைத்து செங்கோட்டை - மயிலாடுதுறை என ஒரே ரயிலாக இயக்கம்.

6. எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வழி செங்கோட்டை வாரம் இரண்டு முறை ரயில்

7. மதுரை - செங்கோட்டை மற்றும் புனலூர் -குருவாயூர் ஆகிய இரண்டு ரயில்களையும் இணைத்து மதுரை - குருவாயூர் என ஒரே ரயிலாக இயக்கம்

8. திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் வழி செங்கோட்டை

9. திருநெல்வேலி - ஈரோடு ரயில் செங்கோட்டை  வரை நீட்டிப்பு

இது போன்ற ரயில்கள் இயக்குவதற்கு மதுரை கோட்டம் முழு ஒத்துழைப்பு நல்கி வருகிறது. இது மட்டும் இல்லாமல் செங்கோட்டை வழியாக இன்னமும் பல ரயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கைகளும் மதுரை கோட்டத்தின் முழு ஆதரவுடன் வெகுவிரைவில் நிறைவேற்றப்பட்டு விடும் என்பதில் ஐயமில்லை. இ

வ்வாறு அதிக ரயில்கள் செங்கோட்டை வழியாக இயக்குகின்ற காரணத்தால் இந்த பகுதியில் உள்ள இருப்புபாதைகள் அதிக இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் இனி இந்த பகுதிகளில் இருவழிபாதை, முனை விரிவாக்கம் போன்ற வளர்ச்சி திட்டங்கள் ஏற்படுத்த வேண்டிய நிலைக்கு ரயில்வே துறை தள்ளப்பட்டுள்ளது. வெகு விரைவில் இதற்கான அறிவிப்புகளை எதிர்ப்பார்க்கலாம்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் பாதிக்கும் வகையில் செய்யப்பட்ட திட்டங்கள்.

1. கன்னியாகுமரி - மும்பை தினசரி ரயில் புனேயுடன் நிறுத்தப்பட்டது.

2. நாகர்கோவில் - மங்களூர் ஏரநாடு ரயில் திருவனந்தபுரத்துடன் நிறுத்தம்

3. கன்னியாகுமரி – திப்ருகார் வாராந்திர ரயில் வாரத்தில் 5 5 நாள் ரயிலாக மாற்றம்  (கேரளா பயணிகளுக்கு பயன்படும் வகையில்)

4. நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில் கேரளா வழியாக 1000 கி.மீ தூரத்தில் இயக்கம்

5. நாகர்கோவில் - திப்ருகர் வாராந்திர சிறப்பு ரயில் கேரளா வழியாக பயணிகளுக்கு பயன்படும் வகையில் இயக்கம்

6. நிலாம்பூர் - கொச்சுவேலி தினசரி ரயில் நாகர்கோவில் பராமரிப்புக்கு என்று கொண்டு வந்தது.

7. அடுத்ததாக திருவனந்தபுரத்திலிருந்து புறப்படும் ஒரு சில நெடுந்தூர ரயில்களை பராமரிப்புக்கு என்று நாகர்கோவில் கொண்டு வரும் திட்டம் உள்ளது.

ஜபல்பூரில் உள்ள மேற்கு மத்திய மண்டலம் சார்பாக அறிவிக்கப்பட்ட ஜெபால்பூலிருந்து சென்னை மதுரை வழியாக  கன்னியாகுமரிக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்  பராமரிப்பு பிரச்சனை காரணமாக கடைசி நேரத்தில் மதுரையுடன் நிறுத்தப்பட்டது. மொத்தமாக கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் பயன்படும் வகையில் திருவனந்தபுரம் கோட்டம் சார்பாக ஒன்றுமே செய்யவில்லை.

திருவனந்தபுரம் கோட்டம் காரணம்?

திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்துக்கு தங்கள் மாநிலம் வழியாக இயங்கும் ரயில்கள் வராமல் பக்கத்து மாவட்டத்தில் புதிய ரயில்கள் இயக்குவதை நினைக்கும் போது நமது பகுதி திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ள காரணத்தால் இது போன்ற ரயில்கள் வராமல் உள்ளது என்று அனைவருக்கும் தௌள தெளிவாக தெரிகிறது. 

இதனால் குமரி மாவட்ட பகுதிகள் மதுரை கோட்டத்தின் கீழ் வந்தால் இதுபோன்ற ரயில்கள் இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் இயல்பாய் தோன்றுகிறது. இது மட்டுமல்லாமல் ஏன் இது போன்ற ரயில்களை திருவனந்தபுரம் கோட்டத்தில் நாகர்கோவிலிருந்து ஏன் இயக்க முடியவில்லை என்று கேள்வி அனைவரது மனதிலும் எழுகின்றது.

கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் பயன்படும் வகையில் இயக்க வேண்டிய மிகமிக முக்கிய கோரிக்கைகள்.

1. திருவனந்தபுரம் - நாகர்கோவில் பயணிகள் ரயில் திருநெல்வேலி வரை நீட்டிப்பு
2. திருநெல்வேலி – நாகர்கோவில்  மற்றும் நாகர்கோவில் - கொச்சுவேளி பயணிகள் ரயில் இணைத்து ஒரே ரயிலாக திருநெல்வேலி - கொச்சுவேலி என்று இயக்கம்
3. புனலூர் - மதுரை தினசரி ரயில் திருச்சி வழியாக வேளாங்கண்ணி வரை நீட்டிப்பு
4. புனலூர் - நாகர்கோவில் பயணிகள் ரயில் திருநெல்வேலி வரை நீட்டிப்பு
5. கோட்டயம் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் பட்டுக்கோட்டை, காரைக்குடி, வழியாக திருவாரூர் வரை நீட்டிப்பு

திருவனந்தபுரம் - நாகர்கோவில் பயணிகள் ரயில் திருநெல்வேலி நீட்டிப்பு:

திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் பயணிகள் ரயில் திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இயக்குவதற்கு எந்த ஒரு இடநெருக்கடி பிரச்சனையும் இல்லை மாறாக நாகர்கோவில் இடநெருக்கடி குறையதான் செய்யும். 

ஆனால் இது போன்ற ரயில்களை அதாவது நாகர்கோவில் - திருநெல்வேலி மார்க்கம் ரயில்களை இயக்க திருவனந்தபுரம் கோட்டம் தயாராக இல்லை என்பதே உண்மை. அதாவது சரி திருநெல்வேலி – நாகர்கோவில் பயணிகள் ரயிலை கொச்சுவேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்றாலும் கூட அதற்கும் திருவனந்தபுரத்தில் நிலவும் இடநெருக்கடியை காரணம் காட்டி திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தயாராக இல்லை" என்று குமரி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory