» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மீன் பதப்படுத்தும் ஆலையை அகற்றக்கோரி தேர்தல் புறக்கணிப்பு : 50பேர் மீது வழக்கு!

திங்கள் 22, ஏப்ரல் 2024 11:14:45 AM (IST)



தூத்துக்குடி அருகே பொட்டலூரணி கிராமத்தில் மீன் பதப்படுத்தும் ஆலைகளை அகற்றக்கோரி தேர்தலை புறக்கணித்து போராட்டம் நடத்திய 50பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி அருகே பொட்டலூரணி அருகில் உள்ள மீன் பதப்படுத்தும் ஆலைகளை அகற்றக்கோரி, கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். கோரிக்கையை வலியுறுத்தி, நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாகவும் அறிவித்தனர். பொட்டலூரணியின் மொத்தம் 931 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக அந்த கிராமத்தில் தனியாக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.

கடந்த 19-ம் தேதி காலையில் வழக்கம்போல் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆனால் வாக்காளர்கள் யாரும் வாக்களிக்க செல்லவில்லை. மக்கள் ஆங்காங்கே கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக வாக்குச்சாவடியை சுற்றிலும் போலீஸ் குவிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் எஸ்பி பாலாஜி சரவணன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஓட்டுப்போட செல்பவர்களை யாரையும் தடுக்க கூடாது என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து பொட்டலூரணி கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்றார்.அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்துவிட்டனர். இதனால் அவர் திரும்பி சென்றார்.

இதற்கிடையே, பொட்டலூரணி வாக்குச்சாவடியில் உள்ள கட்சி முகவரை மாற்றுவதற்காக காரில் சிலர் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அந்த காரை சிறைபிடித்தனர். உடனடியாக போலீசார், காரில் இருந்தவர்களை மீட்டு வேனில் ஏற்றினர். இதனால் அப்பகுதி மக்கள் அந்த வேனை முற்றுகையிட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வேனின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். 

போலீசார், வேனில் இருந்தவர்களை பத்திரமாக காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து பொட்டலூரணி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுனர். மாலை வரை மொத்தம் வாக்குச்சாவடி பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசார், வாக்குச்சாவடி அலுவலர்கள் 20 பேரும், அந்த பகுதியை சேர்ந்த 9 பேரும் என மொத்தம் 29 பேர் மட்டும் வாக்குப்பதிவு செய்தனர்.

இந்தநிலையில், பொட்டலூரணி கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக போராட்டக்குழு தலைவர் சங்கரநாராயணன் உட்பட 50 பேர் மீது புதுக்கோட்டை போலீசார் இரண்டு வழக்குகளை பதிவு செய்தனர். எல்லநாயக்கன்பட்டி வி.ஏ.ஓ., விஜயமூர்த்தி புகாரின்படி இந்த வழக்குகள் பதியப்பட்டது.

இதேபோல, அந்த கிராமத்தை சேர்ந்த முத்தம்மாள் என்பவர் அளித்த புகாரின்படி, காரில் ஆயுதங்களுடன் வந்த மகாராஜன் (25), தங்கபாண்டி, (31), சித்திரைவேல் (26), ராமர் (24) உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து

முத்துசாமிApr 24, 2024 - 07:17:39 AM | Posted IP 172.7*****

மக்களாட்சி நடைபெற்றால் மக்கள் வாழ்வதற்கு தேவையான வசதிகளை தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் தகுந்த ஏற்பாடு செய்தால் புறக்கணிப்பு ஏன் ஏற்படுகிறது. தலைவர் தன்னிச்சையாக செயல்பட்டால் அது மக்களாட்சி கிடையாது. அது அராஜக ஆட்சி ஆகும். இதனை மக்கள் விரும்பமாட்டார்கள். வேறு தலைமையை ஏற்படுத்த முற்படுவார்கள்

m.sundaramApr 22, 2024 - 07:07:32 PM | Posted IP 162.1*****

Police is escalating the situation and divert the attention of the people to other direction. The people who came with weapons should be arrested and put behind the bar which the police failed the discharge their duty diligently. The common people who have no political support have their right to express their anguish in Ahimsa manner . Who has instruct the VAO to lodge the FIR against the protesters? The news must contain full details .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory