» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பாட்டியை கொன்று வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை : குமரி அருகே சோகம்

ஞாயிறு 21, ஏப்ரல் 2024 9:08:07 AM (IST)

திருவட்டார் அருகே பாட்டியை கொன்று வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

குமரி மாவட்டம், திருவட்டாறு அருகே சாரூா் மேலக்காட்டுவிளையைச் சோ்ந்தவா் புஷ்பராஜ். இவரது மனைவி பிளாரன்ஸ் (53). இவா்களுக்கு மகள் பிரியங்கா (24), மகன் அஜித் ஜின் (20) உள்ளனா். தனியாா் கல்வி நிறுவன வேனில் ஓட்டுநராக வேலைபாா்த்து வந்த புஷ்பராஜுக்கு மதுப்பழக்கம் இருந்துவந்த நிலையில், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனைவி பிளாரன்ஸ் அவரை விட்டு பிரிந்து மகள் பிரியங்காவுடன், சிதறாலில் உள்ள தனது தாயின் வீட்டருகே வாடகை வீட்டில் வசித்து வந்தாா். 

இந்நிலையில் மகன் அஜித் ஜின்னுடன் புஷ்பராஜ், தனது தாய் தாசம்மாளுடன் சாரூா் வீட்டில் வசித்து வந்தாா். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புஷ்பராஜ் இறந்துவிட்டாா். இந்நிலையில் பாட்டி தாசம்மாளின் பராமரிப்பில் இருந்த அஜித் ஜின் பெயிண்ட் கடை ஒன்றில் வேலைக்குச் சென்று வந்தாா். அஜித் ஜின்னுக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. இதை பாட்டி தாசம்மாள் கண்டித்துள்ளாா். 

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மது போதையில் அஜித் ஜின் பாட்டி தாசம்மாளிடம் தகராறு செய்துள்ளாா். பின்னா் அவரைத் தாக்கியுள்ளாா். இதில் கட்டிலில் தலை மோதி தாசம்மாள் அங்கேயே உயிரிந்துள்ளாா். அச்சத்தின் காரணமாக அஜித் ஜின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். 

இதையடுத்து நேற்று காலையில் தாசம்மாளின் வீட்டுப் பக்கமாகச் சென்றவா்கள் அஜித் ஜின் தூக்கில் தொங்கி நிற்பதையும், அறையில் தாசம்மாள் இறந்து கிடப்பதையும் பாா்த்து பிளாரன்ஸுக்கு தகவல் கொடுத்தனா். பின்னா் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவட்டாறு போலீசார் இருவரது சடலத்தையும் கைப்பற்றி வழக்குப்பதிந்து ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாட்டியை கொன்று பேரன் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory