» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவில் நாகராஜா கோவில் தை திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

வியாழன் 18, ஜனவரி 2024 12:31:09 PM (IST)



நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஆண்டுதோறும் தைமாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தந்திரி நாகராஜன் நம்பூதிரி கொடியேற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து கொடி மரத்துக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு அபிஷேக பூஜையும், சிறப்பு வழிபாடும் நடந்தது. விழாவில் விஜய்வசந்த் எம்.பி., மேயர் மகேஷ், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன்,  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவிழா நாள்களில் தினமும் காலை மாலை நேரங்களில் வாகன பவனி சிறப்பு அபிஷேகம் சிறப்பு வழிபாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். 9-ம் திருவிழா நாளான 26-ந்தேதி காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார். 10-ம் திருவிழாவான 27-ந்தேதி காலை சிறப்பு அபிஷேகமும், சிறப்பு பூஜையும், மாலை 5.30 மணிக்கு ஆராட்டும் நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு ஆராட்டுத்துறையில் இருந்து சாமி திருக்கோவி லுக்கு எழுந்தருள் நிகழ்ச்சி நடக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory