» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஓட்டலில் தாக்கப்பட்ட ஊழியர் சாவு: கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

சனி 23, டிசம்பர் 2023 11:54:31 AM (IST)

நாகர்கோவிலில் ஓட்டலில் தாக்கப்பட்ட ஊழியர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கீழக்கலங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் மைதீன் (47). இவர் நாகர்கோவிலை அடுத்த சுங்கான்கடை பகுதியில் தங்கியிருந்து நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று ஷேக் மைதீன் ஓட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது நாகர்கோவில் வடசேரி ராமவர்மன்புது தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்ற சுரேஷ் (28), இவரது நண்பர்கள் புத்தேரி ஆணைப்பொத்தை பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்ற அப்பு (20), ராமவர்மன்புது தெருவை சேர்ந்த ஆறுமுகம் (23), அறுகுவிளையை சேர்ந்த மகேஸ்வர் (20) ஆகிய 4 பேரும் சாப்பிடுவதற்காக வந்தனர். அவர்கள் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் வெளியே சென்றதாக தெரிகிறது.

அவர்களை ஷேக் மைதீன் தடுத்து நிறுத்தி உணவு சாப்பிட்டதற்கு பணம் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து ஷேக் மைதீனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதில் பலத்த காயமடைந்த ஷேக் மைதீன் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சுரேஷ், நாகராஜன், ஆறுமுகம், மகேஸ்வர் ஆகிய 4 பேர் மீது கோட்டார் போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்த ஷேக்மைதீன் சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory