» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் 226 மீனவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா அமைச்சர் த.மனோ தங்கராஜ் வழங்கினார்

சனி 16, டிசம்பர் 2023 4:35:39 PM (IST)



சிங்கராவேலர் குடியிருப்பு திட்டத்தின்கீழ் குளச்சல் மற்றும் கிள்ளியூர் சட்டமன்றங்களுக்குட்பட்ட 226 மீனவர்களுக்கு அமைச்சர் த.மனோ தங்கராஜ் இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டம், சுகந்தம் கலையரங்கத்தில் இன்று (16.12.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில், குளச்சல் மற்றும் கிள்ளியூர் சட்டமன்றத்திற்குட்பட்ட மீனவர்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் இலவச வீட்டுமனை பட்டாக்களை பயனாளிகளுக்கு வழங்கி பேசுகையில்: தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கினங்க முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு முழுவதும் நலத்திட்ட உதவிகள், வளர்ச்சி பணிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சிங்காரவேலர் குடியிருப்புத்திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 6 வட்டங்களில் உள்ள தகுதியான பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது. மேலும் கடலோரப்பகுதி மீனவர்கள் தங்களது நிலங்களையும் வரன்முறைப்படுத்தி, இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்கள். 

அம்மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் சிங்காரவேலர் திட்டத்தின் கீழ் கிள்ளியூர் சட்டமன்றத்திற்குட்பட்ட நீரோடி, மிக்கேல்புரம், அன்னை நகர் ஆகிய 3 கிராமங்களை சேர்ந்த 176 பயனாளிகள் மற்றும் குளச்சல் சட்டமன்றத்திற்குட்பட்ட கடியபட்டணம் கிராமத்தைச் சேர்ந்த 50 பயனாளிகள் என 4 மீனவ கிராமங்களை சார்ந்த 226 மீனவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. இது போன்று மேலும் பல திட்டங்கள் உருவாக்கி நலத்திட்டங்கள் வழங்கிட நாம் அனைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

அதனைத்தொடர்ந்து பத்மநாபபுரம் சார் ஆட்சியராக பணிபுரிந்து தற்போது பணி உயர்வு பெற்று மாற்றலாகி செல்ல உள்ள எச்.ஆர்.கௌசிக், அவர்களுக்கு மாண்புகு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், பொன்னாடை போர்த்தி தனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்கள்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமிணயம், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), செ.ராஜேஷ் குமார் (கிள்ளியூர்), நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் எச்.ஆர்.கௌசிக், குளச்சல் நகர்மன்ற தலைவர் நசீர், மீன்வளத்துறை உதவி இயக்குநர் (குளச்சல்) விர்ஜின் கிறாஸ், வட்டாட்சியர்கள் கண்ணன் (கல்குளம்), அனிதா குமாரி (கிள்ளியூர்) உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், பயனாளிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory