» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தேர்தலை பேராயர் ரத்து செய்தது செல்லாது: சினாடு அறிவிப்பு - உபதலைவர் தகவல்!!
சனி 23, அக்டோபர் 2021 3:53:44 PM (IST)

தூத்துக்குடி - நாசரேத் தேர்திருச்சபை தேர்தலை பேராயர் ரத்து செய்தது செல்லாது என சினாடு அறிவிப்பு வெளியிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல இறுதிகட்ட தேர்தல் கடந்த 20ம் தேதி நடந்தது. இதில் டி.எஸ்.எப். அணி சார்பில் போட்டியிட்ட திருமண்டல உப தலைவர் பொறுப்புக்கான குருவானவர் தமிழ்செல்வன், திருமண்டல குருத்துவ காரியதரிசி பொறுப்புக்கான குருவானவர் இம்மானுவேல் வான்ஸ்டக், லே செயலாளர் பதவிக்கான நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், பொருளாளர் பொறுப்புக்கான மோகன்ராஜ் அருமை நாயகம் ஆகியோர் வெற்றி பெற்றதாக பேராயர் அறிவித்தார்.
அவர்கள் நேற்று பொறுப்பேற்க இருந்த நிலையில், தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதால் இறுதி கட்ட தேர்தல் முடிவுகள் அனைத்தையும் ரத்து செய்வதாக பேராயர் அறிவித்தார். ஆனால் அவர் கடத்தப்பட்டிருக்கிறார் என்று புதிய நிர்வாகிகள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக காவல்துறையில் மனு அளித்துள்ளனர். இந்நிலையில், தென்னிந்திய திருச்சபை அதாவது சினாடு மூலம் அறிவிப்பு வெளியிட்டிருப்பதாக உபதலைவர் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். அதில், பேராயர் தன்னிச்சையாக தேர்தலை ரத்து செய்தது செல்லாது. அவர் ஏற்கனவே டி.எஸ்.எப் அணி வெற்றி என்று அறிவித்ததே செல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மக்கள் கருத்து
Sekar ROct 23, 2021 - 11:36:27 PM | Posted IP 173.2*****
Where is moderator?he is a authority person or local bishop
மேலும் தொடரும் செய்திகள்

லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் கைது எதிரொலி: அதிரடி நடவடிக்கையில் இறங்கிய குமரி எஸ்பி!
சனி 25, அக்டோபர் 2025 8:50:44 PM (IST)

குமரி மாவட்டத்தில் பருவமழையினை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் : ஆட்சியர் அறிப்பு
சனி 25, அக்டோபர் 2025 5:16:41 PM (IST)

கன்னியாகுமாரியில் ரூ.1.15 லட்சம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் கைது!
சனி 25, அக்டோபர் 2025 11:55:11 AM (IST)

குடியிருப்பு பகுதியில் நுழைந்த மலைப்பாம்பு மீட்பு
சனி 25, அக்டோபர் 2025 10:59:02 AM (IST)

அரையாண்டு விடுமுறை: தென்மாவட்ட ரயில்களில் டிக்கெட் முன்பதிவு..!
சனி 25, அக்டோபர் 2025 8:42:07 AM (IST)

குமரியில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை: அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
சனி 25, அக்டோபர் 2025 8:34:53 AM (IST)


.gif)
சிவா கத்தார்Oct 24, 2021 - 11:56:55 AM | Posted IP 162.1*****