» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கடலில் மீன்பிடித்தபோது மின்னல் தாக்கி மீனவர் பலி : தூத்துக்குடியில் சோகம்!

வெள்ளி 22, அக்டோபர் 2021 3:39:31 PM (IST)

தூத்துக்குடியில் கடலில் மீன்பிடித்தபோது மின்னல் தாக்கியதில் மீனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.  

தூத்துக்குடி வெள்ளப்பட்டி 50 வீடு காலனியை சேர்ந்தவர் அந்தோணி பாஸ்கர். இவரது மகன்கள் சதீஷ் மற்றும் அந்தோணி செசிலர். (28), மீனவர்களான இவர்கள் இருவரும் இன்று காலை பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது திடீரென்று மின்னல் தாக்கியதில் அந்தோணி செசிலர் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொன்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

RaniOct 22, 2021 - 04:11:39 PM | Posted IP 108.1*****

Malai Seithathu alla... Peithathu

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory