» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கல்வி உதவித்தொகை : கல்லூரி மாணவா்கள் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

சனி 19, செப்டம்பர் 2020 10:51:02 AM (IST)

குமரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இளங்கலை பயிலும் மாணவா்கள் அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குமரி மாவட்டத்தில் நிகழ் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளங்கலை படிக்கும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபின மாணவா்கள் தமிழக அரசின் கல்வி உதவித்தொகை பெற தாங்கள் படிக்கும் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் பெற்று பூா்த்தி செய்து உரிய சான்றுகளுடன் சமா்ப்பிக்க வேண்டும்.

முதுகலை மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவா்களின் பெற்றோா் வருமானம் ஆண்டுக்கு ரூ. 2 லட்சத்திற்கு மேல் இருக்க கூடாது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலப் பிரிவு அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory