» செய்திகள் - விளையாட்டு » உலகம்
மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்கள்: சிரியா முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:50:59 PM (IST)

போர்க் குற்றங்கள் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளில் சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல் ஆசாத்திற்கு அந்நாட்டின் சிவில் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
சிரியாவில் கடந்த 54 ஆண்டுகளாக ஆசாத் குடும்பத்தினரின் ஆட்சி நடைபெற்று வந்தது. 2000-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை பஷார் அல் ஆசாத் சிரியாவின் அதிபராகப் பொறுப்பு வகித்தார். தனது ஆட்சிக் காலத்தில் எதிர்ப்பாளர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கியதுடன், முழு அதிகாரத்தையும் தன் வசமே வைத்திருந்தார்.
கடந்த 2011-இல் தொடங்கிய உள்நாட்டுப் போர் 2024-இல் தீவிரமடைந்தது. கிளர்ச்சிப் படைகள் தலைநகர் டமாஸ்கஸைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, பஷார் அல் ஆசாத் தனது குடும்பத்துடன் ரஷ்யாவிற்குத் தப்பியோடினார். அதனைத் தொடர்ந்து அகமது அல் ஷாரா புதிய அதிபராகப் பதவியேற்றார்.
உள்நாட்டுப் போரின் போது லட்சக்கணக்கான மக்களைக் கொன்றதாக பஷார் அல் ஆசாத் மீது போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த சிரியா சிவில் நீதிமன்றம், முன்னாள் அதிபர் பஷார் அல் ஆசாத் மற்றும் சிரிய ராணுவத்தில் பணியாற்றிய அவரது சகோதரர் மஹர் அல் ஆசாத் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்தது.
மேலும், ஆசாத் ஆட்சியின் போது டாரா மாகாண அரசியல் பாதுகாப்புப் பிரிவின் தலைவராக இருந்த அவரது உறவினர் அடேப் நஜிப்பிற்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளைக் கொன்றது மற்றும் சித்திரவதை செய்த குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்காவுக்கு ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும்: டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 10:39:39 AM (IST)

சீனா, ஜப்பானை உலுக்கிய 'டால்பின்' சூறாவளி: விமானங்கள் ரத்து: 10 லட்சம் பேர் வெளியேற்றம்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 5:08:02 PM (IST)

இந்தியப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரி : அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:34:04 AM (IST)

ஸ்பெயினுக்குள் நுழைய முயன்று அகதிகள் கடலில் மூழ்கிய பரிதாபம்: உயிரிழப்பு 100 ஆக உயர்வு!
சனி 8, ஆகஸ்ட் 2026 5:49:35 PM (IST)

இலங்கையில் தொடரும் சிறைக் கலவரங்கள்: கைதிகள் மோதலில் 3 பேர் பலி; 23 பேர் படுகாயம்!
சனி 8, ஆகஸ்ட் 2026 12:18:26 PM (IST)

தாய்லாந்து பள்ளியில் மாணவன் துப்பாக்கிச்சூடு: ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 9 பேர் பலி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:33:44 PM (IST)


