» செய்திகள் - விளையாட்டு » உலகம்
நரேந்திர மோடி எனது சிறந்த நண்பர்; என்னை இந்தியா 100 சதவீதம் நம்பலாம்: ட்ரம்ப் சொல்கிறார்!
செவ்வாய் 26, மே 2026 4:47:41 PM (IST)

"பிரதமர் நரேந்திர மோடி எனது சிறந்த நண்பர். என்னை இந்தியா நூறு சதவீதம் நம்பலாம்” என தொலைபேசி மூலம் நிகழ்த்திய உரையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 250-வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்ட நிகழ்வு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தியாவுக்கு மார்கோ ரூபியோ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் நிகழ்ச்சியும் இதில் நடைபெற்றது. அப்போது செர்ஜியோ கோரை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உரையாற்றினார். அவரது உரையை அரங்கில் இருந்த அனைவரும் கேட்கும் வகையில் ஒலிவாங்கி வழியாக செர்ஜியோ கோர் ஒலிபரப்பினார்.
ட்ரம்ப் தனது உரையில், "அனைவருக்கும் வணக்கம். பிரதமர் நரேந்திர மோடியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எனது சிறந்த நண்பர். பிரதமர் மோடியின் மிகப் பெரிய ரசிகர் நான்.
என்னை இந்தியா நூறு சதவீதம் நம்பலாம். அதேபோலவே எங்கள் தேசத்தையும் நம்பலாம். உதவி தேவையெனில் யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என அவர்கள் அறிவார்கள். அமெரிக்க தேசம் புதிய சாதனைகளை பதிவு செய்து வருகிறது. அது பொருளாதாரம், பங்குச் சந்தை என விரிவடைந்துள்ளது” என கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு: பலி 633 ஆக உயர்வு; இந்தியர்கள் உட்பட 3,000 பேர் மாயம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:06:57 PM (IST)

நேபாள வெள்ளத்தால் பலியானோரின் எண்ணிக்கை 500 : மீட்புப் பணிகள் தீவிரம்!
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 11:23:24 AM (IST)

குழந்தைகளை அடிமையாக்குவதாகக் குற்றச்சாட்டு: 162 கோடி அபராதம் செலுத்த மெட்டா ஒப்புதல்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 12:01:50 PM (IST)

நேபாள வெள்ளத்திற்கு நிலநடுக்கம் காரணமில்லை : அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் விளக்கம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 11:31:18 AM (IST)

நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளப்பெருக்கு: 1,000-க்கும் மேற்பட்டோர் மாயம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 11:00:38 AM (IST)

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 105 இந்தியர்கள் உட்பட 384 சுற்றுலாப் பயணிகள் மாயம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:47:40 PM (IST)


