» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனைத்து வர்த்தகக் கப்பல்களுக்கும் அனுமதி: ஈரான் அறிவிப்பு
வெள்ளி 15, மே 2026 4:47:36 PM (IST)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள முட்டுக் கட்டைகளை உடைக்கும் விதமாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனைத்து வர்த்தகக் கப்பல்களும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
புதுடெல்லியில் இன்று நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்ற ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி, செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: "எங்களது பார்வையில், ஹார்முஸ் ஜலசந்தி அனைத்து நாடுகளின் வர்த்தகக் கப்பல்களுக்காகவும் திறந்து விடப்பட்டுள்ளது. நாங்கள் எந்த தடையையும் உருவாக்கவில்லை. ஆனால், இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தும் கப்பல்கள் ஈரானியக் கடற்படையுடன் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்."
தற்போதைய பதற்றமான சூழலுக்கு அமெரிக்காவின் முற்றுகையே காரணம் என்று சாடிய அவர், அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் நீக்கப்பட்டால் சர்வதேச வர்த்தகத்தில் நிலவும் சிக்கலான நிலைமை உடனடியாக முடிவுக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் வர்த்தகத்திற்கு இந்த வழித்தடம் மிகவும் இன்றியமையாதது என்பதால், ஈரானின் இந்த அறிவிப்பு உலக நாடுகளுக்குச் சற்று நிம்மதியை அளித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்புள்ளதா என்பதைப் பொருளாதார நிபுணர்கள் உற்று நோக்கி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சீஷெல்ஸ் நவசக்தி விநாயகர் கோயிலில் மோடி வழிபாடு: உலக அமைதிக்காகப் பிரார்த்தனை!
திங்கள் 29, ஜூன் 2026 3:45:56 PM (IST)

வெனிசுலாவில் வரலாறு காணாத இரட்டை நிலநடுக்கம்: 164 பேர் பலி, நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம்!
வெள்ளி 26, ஜூன் 2026 8:52:06 AM (IST)

கமேனியின் இறுதிச் சடங்கு: பிரதமர் மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் அழைப்பு!
புதன் 24, ஜூன் 2026 4:29:35 PM (IST)

இந்திய வங்கிக்கு வட்டியுடன் ரூ.100 கோடி செலுத்த நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவு!
புதன் 24, ஜூன் 2026 11:57:40 AM (IST)

கத்தார் எரிவாயு ஆலையில் பயங்கர வெடிவிபத்து : 12 இந்தியர்கள் உட்பட 13 பேர் பலி!
செவ்வாய் 23, ஜூன் 2026 12:42:28 PM (IST)

அமெரிக்கா - இத்தாலி தலைவர்கள் இடையே மோதல் முற்றியது: டிரம்ப் பேச்சுக்கு மெலோனி பதிலடி!
திங்கள் 22, ஜூன் 2026 11:00:35 AM (IST)


