» செய்திகள் - விளையாட்டு » உலகம்
நிலவின் மறுபக்கத்தைச் சுற்றி வந்த ஆர்டெமிஸ்-2 வீரர்கள் : உலக நாடுகள் பாராட்டு!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 10:56:08 AM (IST)

மனிதகுல வரலாற்றில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவை நெருங்கிச் சென்ற நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' விண்வெளி ஆய்வுத் திட்டத்தின் 4 வீரர்கள், 10 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று வெற்றிகரமாகப் பூமிக்குத் திரும்பினர்.
கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து விண்ணில் பாய்ந்த இந்த விண்கலத்தில் ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெர்மி ஹேன்சன் ஆகிய 4 வீரர்கள் பயணித்தனர். இவர்கள் நிலவின் தரைப்பகுதியில் இறங்காமல், நிலவைச் சுற்றி 4,600 மைல் தொலைவு பயணித்து ஆய்வு மேற்கொண்டனர்.
குறிப்பாக, இதுவரை மனிதர்கள் நேரில் பார்த்திராத நிலவின் பின்பகுதியை (Far side of the Moon) மிக அருகிலிருந்து ஆய்வு செய்த முதல் மனிதக் குழு என்ற உலக சாதனையை இவர்கள் படைத்துள்ளனர்.
பயணத்தை முடித்த விண்கலம், இந்திய நேரப்படி நேற்று காலை 5:37 மணிக்கு பசிபிக் பெருங்கடலில் பாரசூட் மூலம் பாதுகாப்பாக வந்து இறங்கியது. அமெரிக்கக் கடற்படையின் மீட்புக் கப்பலான 'யு.எஸ்.எஸ். ஜான் பி.முர்தா' பணியாளர்கள் வீரர்களை உற்சாகமாக வரவேற்றனர்.
விமானி விக்டர் குளோவர் தனது அனுபவம் குறித்துப் பேசுகையில், "வளிமண்டலத்திற்குள் நுழையும்போது விண்கலம் ஒரு நெருப்புப் பந்து போலப் பயணித்தது பிரமிக்கத்தக்க அனுபவமாக இருந்தது" என்றார்.
நாசாவின் இந்தத் திட்டத்தின் வெற்றி, நிலவில் மனிதர்களைத் தரையிறக்கும் 'ஆர்டெமிஸ்-3' திட்டத்திற்கு (2028-ல் எதிர்பார்க்கப்படுகிறது) பெரும் அடித்தளமாக அமைந்துள்ளது. இது எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கும் உதவியாக இருக்கும் என நாசா தெரிவித்துள்ளது.
இஸ்ரோ வாழ்த்து: இந்த வரலாற்றுச் சாதனைக்காக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா தனது ககன்யான் திட்டத்தின் தொடர்ச்சியாக 2040-ஆம் ஆண்டுக்குள் இந்தியர்களை நிலவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு: பலி 633 ஆக உயர்வு; இந்தியர்கள் உட்பட 3,000 பேர் மாயம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:06:57 PM (IST)

நேபாள வெள்ளத்தால் பலியானோரின் எண்ணிக்கை 500 : மீட்புப் பணிகள் தீவிரம்!
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 11:23:24 AM (IST)

குழந்தைகளை அடிமையாக்குவதாகக் குற்றச்சாட்டு: 162 கோடி அபராதம் செலுத்த மெட்டா ஒப்புதல்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 12:01:50 PM (IST)

நேபாள வெள்ளத்திற்கு நிலநடுக்கம் காரணமில்லை : அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் விளக்கம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 11:31:18 AM (IST)

நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளப்பெருக்கு: 1,000-க்கும் மேற்பட்டோர் மாயம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 11:00:38 AM (IST)

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 105 இந்தியர்கள் உட்பட 384 சுற்றுலாப் பயணிகள் மாயம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:47:40 PM (IST)


