» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்கா - ஈரான் போர்: மத்தியஸ்தம் செய்ய முன்வந்த பாகிஸ்தானுக்கு ஈரான் மறுப்பு..!
செவ்வாய் 31, மார்ச் 2026 12:32:25 PM (IST)

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் மேற்கொண்ட மத்தியஸ்த முயற்சியை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்க, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் முன்மொழிந்திருந்தார். இதற்கான சமாதான முயற்சியில் பாகிஸ்தான் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
பாகிஸ்தானின் இந்த முன்மொழிவு குறித்து மும்பையில் உள்ள ஈரானிய தூதரகம் நேற்று (மார்ச் 30) வெளியிட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது: "பாகிஸ்தான் முன்னெடுத்துள்ள இந்தச் சமாதான முயற்சியில் ஈரானுக்கு எவ்விதப் பங்களிப்பும் இல்லை. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் அடிக்கடி மாறும் தன்மை கொண்டவை; அவர்கள் தங்கள் பேச்சைக் காப்பாற்ற மாட்டார்கள். போர் முடிவுக்கு வருவதை ஈரான் வரவேற்கிறது. ஆனால், இந்தப் போரைத் தொடங்கியது யார் என்பதை உலகம் நினைவில் கொள்ள வேண்டும்."இவ்வாறு ஈரான் தூதரகம் அமெரிக்காவின் நம்பகத்தன்மை குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளது.
வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் ரத்து
ஈரான் - அமெரிக்கா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் தலைமையில் துருக்கி, சவூதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்தது.
ஆனால், ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் கடும் துப்பாக்கிச் சூடு மற்றும் மோதல் வெடித்ததைத் தொடர்ந்து, நிலவும் பாதுகாப்புச் சூழல் காரணமாக இக்கூட்டம் அவசரமாக ரத்து செய்யப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானின் உள்நாட்டு எல்லைப் பாதுகாப்புப் பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க, ஈரானின் நேரடி மறுப்பு அந்நாட்டின் தார்மீக முயற்சிக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு: பலி 633 ஆக உயர்வு; இந்தியர்கள் உட்பட 3,000 பேர் மாயம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:06:57 PM (IST)

நேபாள வெள்ளத்தால் பலியானோரின் எண்ணிக்கை 500 : மீட்புப் பணிகள் தீவிரம்!
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 11:23:24 AM (IST)

குழந்தைகளை அடிமையாக்குவதாகக் குற்றச்சாட்டு: 162 கோடி அபராதம் செலுத்த மெட்டா ஒப்புதல்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 12:01:50 PM (IST)

நேபாள வெள்ளத்திற்கு நிலநடுக்கம் காரணமில்லை : அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் விளக்கம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 11:31:18 AM (IST)

நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளப்பெருக்கு: 1,000-க்கும் மேற்பட்டோர் மாயம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 11:00:38 AM (IST)

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 105 இந்தியர்கள் உட்பட 384 சுற்றுலாப் பயணிகள் மாயம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:47:40 PM (IST)


