» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாகிஸ்தானில் லஷ்கர் பயங்கரவாதி படுகொலை: சொந்தக் குடும்பத்தினரே தீர்த்துக்கட்டினர்?
திங்கள் 23, மார்ச் 2026 12:55:43 PM (IST)
பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தளபதியான பிலால் ஆரிப் சராபி, அவரது குடும்ப உறுப்பினர்களாலேயே கத்தியால் குத்தப்பட்டும், துப்பாக்கியால் சுடப்பட்டும் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானில் முரிட்கே பகுதியில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைமையகத்திற்கு அருகிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சனிக்கிழமை ஈத் தொழுகை முடிந்து திரும்பியபோது, சராபிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்தப் படுகொலை நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தப் படுகொலைக்கான துல்லியமான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், இது ஒரு 'சொந்தக் குடும்பத் தகராறு' காரணமாகவே நிகழ்ந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இக்கொலையில் தொடர்புடைய நபர்களைப் பாகிஸ்தான் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிகிறது. உயிரிழந்த சராபியின் புகைப்படங்கள் மற்றும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தாலும், அவற்றின் உண்மைத்தன்மை இன்னும் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை.
பிலால் ஆரிப் சராபி, முரிட்கே மையத்தில் இளைஞர்களைத் தீவிரவாதப் பாதையில் திருப்புவதையும், அவர்களுக்குத் தீவிரவாதக் கொள்கைகளைப் போதித்து மூளைச்சலவை செய்வதையும் முக்கியப் பணியாகக் கொண்டிருந்தார். இருப்பினும், இவர் இந்தியாவின் 'தேடப்படும் குற்றவாளிகள்' பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு: பலி 633 ஆக உயர்வு; இந்தியர்கள் உட்பட 3,000 பேர் மாயம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:06:57 PM (IST)

நேபாள வெள்ளத்தால் பலியானோரின் எண்ணிக்கை 500 : மீட்புப் பணிகள் தீவிரம்!
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 11:23:24 AM (IST)

குழந்தைகளை அடிமையாக்குவதாகக் குற்றச்சாட்டு: 162 கோடி அபராதம் செலுத்த மெட்டா ஒப்புதல்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 12:01:50 PM (IST)

நேபாள வெள்ளத்திற்கு நிலநடுக்கம் காரணமில்லை : அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் விளக்கம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 11:31:18 AM (IST)

நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளப்பெருக்கு: 1,000-க்கும் மேற்பட்டோர் மாயம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 11:00:38 AM (IST)

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 105 இந்தியர்கள் உட்பட 384 சுற்றுலாப் பயணிகள் மாயம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:47:40 PM (IST)


