» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா கூட்டுத் தாக்குதல் : மத்திய கிழக்கில் போர் மூண்டது!
சனி 28, பிப்ரவரி 2026 4:51:57 PM (IST)

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த மோதல் போக்கு, தற்போது ஒரு முழுமையான போராக உருவெடுத்துள்ளது. இஸ்ரேலையும் அமெரிக்காவையும் தனது முதன்மை எதிரிகளாக ஈரான் கருதி வரும் சூழலில், ஈரானின் அணு ஆயுத முயற்சி தங்களது நாட்டின் இருப்பிற்கே அச்சுறுத்தல் என இஸ்ரேல் எச்சரித்து வந்தது.
இது தொடர்பாக ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்த அமெரிக்கா மேற்கொண்ட பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், ஈரானின் அணுசக்தி மையங்கள், அணு உள்கட்டமைப்புகள் மற்றும் முக்கிய ராணுவத் தளங்களைக் குறிவைத்து இஸ்ரேலும் அமெரிக்காவும் இன்று அதிரடித் தாக்குதலைத் தொடங்கியுள்ளன.
இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேல் மட்டுமன்றி மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நட்பு நாடுகளாகக் கருதப்படும் நாடுகள் மீதும் ஈரான் தீவிரமான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. குறிப்பாக, அமெரிக்கப் படைத்தளங்கள் அமைந்துள்ள சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், பஹ்ரைன், ஓமன் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. ஈரானில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் இந்த நாடுகளில் உள்ள முக்கிய இலக்குகளைத் தாக்கி வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த மோதல்களால் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. ஈரானின் இந்தத் தீவிரமான பதிலடித் தாக்குதலில் பல இடங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலைமை மோசமடைந்து வருவதால் வான்வெளிப் போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், சர்வதேச நாடுகள் இந்த மோதலை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா நள்ளிரவில் ஏவுகணைத் தாக்குதல்: ஒருவர் பலி; 16 பேர் காயம்!
திங்கள் 20, ஜூலை 2026 5:01:30 PM (IST)

துபாய் இந்தியத் துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடல்: பாஸ்போர்ட், விசா சேவைகள் நிறுத்தம்!
வெள்ளி 17, ஜூலை 2026 12:53:31 PM (IST)

ஈரான் தாக்குதலில் இந்தியர் மரணம் : கப்பல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!
வியாழன் 16, ஜூலை 2026 12:37:58 PM (IST)

ஹோர்முஸ் தாக்குதலில் இந்திய மாலுமி பலி: ஈரானுக்கு மத்திய அரசு கண்டனம்!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:20:43 PM (IST)

ஈரானைக் கற்காலத்திற்குக் கொண்டு வந்துவிட்டோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிக்கை!
செவ்வாய் 14, ஜூலை 2026 12:11:48 PM (IST)

ஈரானுக்கு ஆதரவாக களம் இறங்கிய ரஷியா: அதிநவீன உளவு விமானத்தை அனுப்பினார் புதின்!
செவ்வாய் 14, ஜூலை 2026 8:33:19 AM (IST)


