» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஊழல் வழக்குகளில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை: வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 2, பிப்ரவரி 2026 4:34:29 PM (IST)
வங்கதேச முன்னாள் பிரதமரும் அவாமி லீக் கட்சித் தலைவருமான ஷேக் ஹசீனாவுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வங்கதேசத்தில் பூதாகரமாக வெடித்து ஆட்சி மாற்றத்தை விளைவித்த மாணவா்கள் போராட்டத்தைத் தொடா்ந்து, கடந்த 2024-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா(78) இந்தியாவுக்கு தப்பிச் சென்றாா். அதன்பிறகு வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால ஆட்சி நடைபெற்று வருகிறது. வங்கதேசத்திலிருந்து வெளியேறி இந்தியாவில் பாதுகாப்புக்காக தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இரு வெவ்வேறு ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளில் ஷேக் ஹசீனாவுக்கு பத்தாண்டுகள் சிறைத்தண்டனை விதித்து வங்கதேச நீதிமன்றம் திங்கள்கிழமை(பிப். 2) உத்தரவிட்டது. அரசு வீட்டுவசதி திட்டமொன்றில், அரசு நில ஒதுக்கீட்டில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஷேக் ஹசீனா மீது குற்றச்சாட்டுகள் பதிவான நிலையில், நீதிமன்ற விசாரணையில் அவை நிரூபிக்கப்பட்டுள்ளன.
ஷேக் ஹசீனா மட்டுமில்லாது, மேற்கண்ட வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அவருடைய உறவினர்களான முஜீப் சித்திக், துலீப் ரிச்வானா சித்திக், ஆஸ்மினா சித்திக் மற்றும் பிறருக்கும் சிறைத்தண்டனை விதித்து தாக்கா சிறப்பு நீதிபதிகள் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், அவர்கள் அனைவருக்கும் தலா 1 லட்சம் அபராதமும் விதிக்கப்ப்ட்டுள்ளது. அபராதம் செலுத்தத் தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறைத்தண்டனையும் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.
வங்கதேசத்தில் பூதாகரமாக வெடித்து ஆட்சி மாற்றத்தை விளைவித்த மாணவா்கள் போராட்டத்தைத் தொடா்ந்து, கடந்த 2024-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா(78) இந்தியாவுக்கு தப்பிச் சென்றாா். அதன்பிறகு வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால ஆட்சி நடைபெற்று வருகிறது. வங்கதேசத்திலிருந்து வெளியேறி இந்தியாவில் பாதுகாப்புக்காக தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.இந்த நிலையில், இரு வெவ்வேறு ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளில் ஷேக் ஹசீனாவுக்கு பத்தாண்டுகள் சிறைத்தண்டனை விதித்து வங்கதேச நீதிமன்றம் திங்கள்கிழமை(பிப். 2) உத்தரவிட்டது. அரசு வீட்டுவசதி திட்டமொன்றில், அரசு நில ஒதுக்கீட்டில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஷேக் ஹசீனா மீது குற்றச்சாட்டுகள் பதிவான நிலையில், நீதிமன்ற விசாரணையில் அவை நிரூபிக்கப்பட்டுள்ளன.
ஷேக் ஹசீனா மட்டுமில்லாது, மேற்கண்ட வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அவருடைய உறவினர்களான முஜீப் சித்திக், துலீப் ரிச்வானா சித்திக், ஆஸ்மினா சித்திக் மற்றும் பிறருக்கும் சிறைத்தண்டனை விதித்து தாக்கா சிறப்பு நீதிபதிகள் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், அவர்கள் அனைவருக்கும் தலா 1 லட்சம் அபராதமும் விதிக்கப்ப்ட்டுள்ளது. அபராதம் செலுத்தத் தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறைத்தண்டனையும் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகின் இளம் பேராசிரியராக 18 வயதில் சாதனை : அமெரிக்க இளைஞருக்கு குவியும் பாராட்டு!
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:46:30 AM (IST)

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 10:12:10 AM (IST)

இலங்கை ஈஸ்டர் தினக் குண்டுவெடிப்பு வழக்கு : உயர் அதிகாரிகள் இருவருக்கு மரண தண்டனை!
சனி 1, ஆகஸ்ட் 2026 11:15:09 AM (IST)

பாகிஸ்தானில் டிரோன் மூலம் குண்டு வீச்சு: 11 போலீசார் பலி, 15 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
வெள்ளி 31, ஜூலை 2026 12:55:12 PM (IST)

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் மீது சர்வதேசப் பிடிவாரண்ட்: ரஷ்யா அதிரடி நடவடிக்கை!
புதன் 29, ஜூலை 2026 4:46:39 PM (IST)

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு - மீட்புப் பணிகள் தீவிரம்!
புதன் 29, ஜூலை 2026 12:04:25 PM (IST)


