» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ரஷியா-உக்ரைன் போருக்கு ஐரோப்பிய ஒன்றியம் மறைமுகமாக நிதியளிக்கிறது: அமெரிக்கா பாய்ச்சல்!
புதன் 28, ஜனவரி 2026 4:13:50 PM (IST)
இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், ரஷியா-உக்ரைன் போருக்கு மறைமுகமாக ஐரோப்பிய ஒன்றியம் நிதியளிக்கிறது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் ஆகிய இருவரும் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்தனர். அவர்களது இந்த பயணத்தின்போது இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே வெளிப்படையான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான ஆலோசனை நடைபெற்றது.இதையடுத்து அனைத்து ஒப்பந்தங்களின் தாய் என பெயரிடப்பட்ட, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, வெளிப்படையான வர்த்தக ஒப்பந்தம் இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே இறுதி செய்யப்பட்டது. இதனை இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கூட்டாக அறிவித்தனர்.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஐரோப்பிய ஒன்றியம், இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது. வர்த்தக ஒப்பந்தங்கள், முதலீடு மற்றும் கூட்டாண்மை ஆகியவற்றில் இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான நட்பு மற்றும் நம்பிக்கையை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அரசின் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறுகையில், "இந்தியாவுடன் ‘அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களின் தாய்’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் ஐரோப்பா தனக்கு எதிரான போருக்கு தானே நிதி அளித்துக் கொள்கிறது.
ரஷியாவுடனான நேரடி எரிசக்தி வர்த்தகத்தை ஐரோப்பா கணிசமாக குறைத்திருக்கலாம். ஆனால் இந்தியா மீது அமெரிக்கா வரிகளை விதித்துள்ள நிலையிலும், இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட ரஷிய எண்ணெய்யை வாங்குவதன் மூலம் ரஷியா-உக்ரைன் போருக்கு மறைமுகமாக ஐரோப்பிய ஒன்றியம் நிதியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகின் இளம் பேராசிரியராக 18 வயதில் சாதனை : அமெரிக்க இளைஞருக்கு குவியும் பாராட்டு!
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:46:30 AM (IST)

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 10:12:10 AM (IST)

இலங்கை ஈஸ்டர் தினக் குண்டுவெடிப்பு வழக்கு : உயர் அதிகாரிகள் இருவருக்கு மரண தண்டனை!
சனி 1, ஆகஸ்ட் 2026 11:15:09 AM (IST)

பாகிஸ்தானில் டிரோன் மூலம் குண்டு வீச்சு: 11 போலீசார் பலி, 15 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
வெள்ளி 31, ஜூலை 2026 12:55:12 PM (IST)

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் மீது சர்வதேசப் பிடிவாரண்ட்: ரஷ்யா அதிரடி நடவடிக்கை!
புதன் 29, ஜூலை 2026 4:46:39 PM (IST)

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு - மீட்புப் பணிகள் தீவிரம்!
புதன் 29, ஜூலை 2026 12:04:25 PM (IST)


