» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷ்யா அதிபர் புதின் கையெழுத்து!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:21:23 AM (IST)

இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்தத்தை அங்கீகரிக்கும் சட்டத்தில் ரஷ்யா அதிபர் புதின் கையெழுத்திட்டார்.
இந்தியா-ரஷ்யா இடையேயான ராணுவ ஒப்பந்தம் இந்த ஆண்டு தொடக்கத்தில் கையெழுத்தானது. இதற்கான சட்டம் ஒன்று ரஷ்யா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தளவாட ஆதரவின் பரஸ்பர பரிமாற்ற ஒப்பந்தம் எனப்படும் இந்த சட்டத்துக்கு கீழவை கடந்த 2-ந்தேதியும், மேலவை 8-ந்தேதியும் ஒப்புதல் வழங்கியது.
பின்னர் அதிபரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், 'Reciprocal Exchange of Logistics Support' என்ற ராணுவ ஒப்பந்தத்தை அங்கீகரிக்கும் சட்டத்தில் அதிபர் புதின் நேற்று கையெழுத்து போட்டார். ரஷ்யா தனது ராணுவ வீரர்கள், போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தளவாடங்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும். இதைப்போல இந்தியாவும் ரஷ்யாவுக்கு வழங்கும்.
குறிப்பாக கூட்டுப் பயிற்சிகள், பயிற்சித் திட்டங்கள், மனிதாபிமான உதவிகள், பேரிடர் நிவாரணப் பணிகள் மற்றும் பிற பணிகளில் இவை பயன்படுத்தப்படும் என ரஷிய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் இந்தியாவின் படைகள் ரஷ்யா செல்வதற்கும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது. இருநாட்டு ராணுவ ஒத்துழைப்புக்கும் இது வழிவகுக்கும் என கூறியுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சீனாவுடனான வர்த்தக உறவால் பிரிட்டனுக்குப் பெரும் லாபம் : பிரதமர் கியர் ஸ்டார்மர்
சனி 31, ஜனவரி 2026 11:59:49 AM (IST)

தமிழக கோயில்களில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா முடிவு!
சனி 31, ஜனவரி 2026 10:56:34 AM (IST)

சீனாவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்த முயல்வது பிரிட்டனுக்கு மிகவும் ஆபத்தானது: ட்ரம்ப் எதிர்ப்பு
வெள்ளி 30, ஜனவரி 2026 4:35:32 PM (IST)

கொலம்பியாவில் விமான விபத்து: எம்.பி. உள்பட 15 பேர் உயிரிழப்பு
வியாழன் 29, ஜனவரி 2026 12:50:44 PM (IST)

ஊழல் புகார் வழக்கில் தென்கொரியா முன்னாள் அதிபர் மனைவிக்கு 20 மாதம் சிறை தண்டனை!
வியாழன் 29, ஜனவரி 2026 8:28:35 AM (IST)

ரஷியா-உக்ரைன் போருக்கு ஐரோப்பிய ஒன்றியம் மறைமுகமாக நிதியளிக்கிறது: அமெரிக்கா பாய்ச்சல்!
புதன் 28, ஜனவரி 2026 4:13:50 PM (IST)

