» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:08:36 PM (IST)

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர் கடற்கரையில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர் கடற்கரையில் யூதர்களின் ஹனுக்கா பண்டிகையைக் கொண்டாட ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது துப்பாக்கியுடன் வந்த 2 பேர் அங்கு கூடியிருந்தவர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 10 பேர் பலியானதாக போலீசார் தெரிவித்தனர்.
அவர்களில் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியவரும் அடங்குவர் எனக் கூறப்படுகிறது. மேலும் 12 பேர் காயமடைந்ததாக தெரிகிறது. ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி ஆல்பனேசி, சிட்னி கடற்கரையில் இன்று நடந்த துப்பாக்கிச்சூடு அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். அந்தப் பகுதியில் உள்ளவர்கள் நியூ சௌத் வேல்ஸ் போலீசார் வழங்கும் தகவல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் குறிப்பட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சீனாவுடனான வர்த்தக உறவால் பிரிட்டனுக்குப் பெரும் லாபம் : பிரதமர் கியர் ஸ்டார்மர்
சனி 31, ஜனவரி 2026 11:59:49 AM (IST)

தமிழக கோயில்களில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா முடிவு!
சனி 31, ஜனவரி 2026 10:56:34 AM (IST)

சீனாவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்த முயல்வது பிரிட்டனுக்கு மிகவும் ஆபத்தானது: ட்ரம்ப் எதிர்ப்பு
வெள்ளி 30, ஜனவரி 2026 4:35:32 PM (IST)

கொலம்பியாவில் விமான விபத்து: எம்.பி. உள்பட 15 பேர் உயிரிழப்பு
வியாழன் 29, ஜனவரி 2026 12:50:44 PM (IST)

ஊழல் புகார் வழக்கில் தென்கொரியா முன்னாள் அதிபர் மனைவிக்கு 20 மாதம் சிறை தண்டனை!
வியாழன் 29, ஜனவரி 2026 8:28:35 AM (IST)

ரஷியா-உக்ரைன் போருக்கு ஐரோப்பிய ஒன்றியம் மறைமுகமாக நிதியளிக்கிறது: அமெரிக்கா பாய்ச்சல்!
புதன் 28, ஜனவரி 2026 4:13:50 PM (IST)


தேச பக்தன்Dec 15, 2025 - 09:38:00 AM | Posted IP 104.2*****