» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியாவின் வளர்ச்சிக்கு, நாங்கள் தோளோடு தோளாக... ரஷ்ய அதிபர் மாளிகை..!!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 5:42:52 PM (IST)

ரஷ்ய அதிபர் புதின் வருகிற 4 ஆம் தேதி இந்தியா வர உள்ள நிலையில், "இந்தியாவின் வளர்ச்சிக்கு, நாங்கள் தோளோடு தோளாக துணை நின்றதில் பெருமைப்படுகிறோம்" என்று ரஷ்ய அதிபர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ரஷ்யா -உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக என்று கூறி ரஷ்யாவிடம் சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கூடுதல் வரிகளை விதித்தார். இதனையடுத்து இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை சமீபத்தில் குறைத்துள்ளது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் அரசு முறை பயணமாக வருகிற 4ம் தேதி இந்தியா வருகின்றார்.
ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வர உள்ள நிலையில், இருநாட்டு உறவுகள் குறித்து ரஷ்ய அதிபர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்; இந்திய-ரஷ்ய உறவு என்பது வெறும் ராஜாங்க ரீதியில் மட்டுமல்ல, அதில் ஆழமான வரலாற்று பின்னணி உள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக்கு, நாங்கள் தோளோடு தோளாக துணை நின்றதில் பெருமைப்படுகிறோம். இன்றைய காலகட்டத்தில் இந்தியாவின் நட்புரீதியான நிலைப்பாடுகளுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே ரஷ்ய துணை பிரதமர் டெனிஸ் மந்துரோவ் கூறுகையில்; ரஷ்ய அதிபர் புதினின் இந்திய பயணம் இருதரப்புக்கும் இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும். இந்திய ரஷ்ய உறவு நெருக்கமாக உள்ள நிலையில், இருநாட்டு தலைவர்களும் தனிப்பட்ட பிணைப்பை கொண்டிருப்பதாக மந்துரோவ் குறிப்பிட்டார். அத்துடன் பல இந்திய மாணவர்கள் ரஷ்யாவில் கல்வி பயில்வதாகவும், அவர்களில் 14 ஆயிரம் பேர் மருத்துவம் பயில்வதாகவும் தெரிவித்த அவர், இந்தியா ரஷ்யா இடையே வர்த்தகம் மட்டுமல்லாது கல்வி, வணிகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் விரிவடைந்து வருவதாக குறிப்பிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 10:12:10 AM (IST)

இலங்கை ஈஸ்டர் தினக் குண்டுவெடிப்பு வழக்கு : உயர் அதிகாரிகள் இருவருக்கு மரண தண்டனை!
சனி 1, ஆகஸ்ட் 2026 11:15:09 AM (IST)

பாகிஸ்தானில் டிரோன் மூலம் குண்டு வீச்சு: 11 போலீசார் பலி, 15 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
வெள்ளி 31, ஜூலை 2026 12:55:12 PM (IST)

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் மீது சர்வதேசப் பிடிவாரண்ட்: ரஷ்யா அதிரடி நடவடிக்கை!
புதன் 29, ஜூலை 2026 4:46:39 PM (IST)

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு - மீட்புப் பணிகள் தீவிரம்!
புதன் 29, ஜூலை 2026 12:04:25 PM (IST)

ஜெர்மனி ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோவில் திருவிழா: அதிபர் ஃபிராங்க்-வால்டர் ஸ்டெயின்மியர் பங்கேற்பு!
செவ்வாய் 28, ஜூலை 2026 4:21:10 PM (IST)


