» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஈரான் ஏவுகணை திட்டத்திற்கு உதவி: இந்திய நிறுவனத்துக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை!!
சனி 15, நவம்பர் 2025 12:52:24 PM (IST)
ஈரான் ஏவுகணை திட்டத்துக்கு உதவுவதாகக் கூறி இந்திய ரசாயன நிறுவனத்துக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது.
மராட்டியத்தை சேர்ந்த பார்ம்லேண் நிறுவனம், ஏவுகணை உற்பத்திக்கான ரசாயனத்தை ஏற்றுமதி செய்வதாக கூறி தடை விதிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத் தடைஎன்பது ஒரு நாடு, நிறுவனம் அல்லது தனிநபர் மீது பிற நாடுகள் விதிக்கும் நிதி மற்றும் வணிக கட்டுப்பாடுகளாகும். இந்தத் தடைகள் பொதுவாக சட்டவிரோதமான செயல்கள், மனித உரிமை மீறல்கள் அல்லது உலக அமைதிக்கு அச்சுறுத்தலான செயல்களைத் தடுப்பதற்காக விதிக்கப்படுகின்றன. சமீபத்தில், அமெரிக்கா ஈரான், சீனா, இந்தியா, ஹாங்காங் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது, குறிப்பாக ஈரான் ஏவுகணைத் திட்டத்துடன் தொடர்புடையவர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. மேலும், ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனங்கள் மீதும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அமெரிக்க அரசாங்கம் உலகளவில் இயங்கி வரும் வர்த்தக நிறுவனங்கள் மீது நேற்று புதிதாக பொருளாதர தடை விதித்தது. ஈரானின் ஏவுகணை மற்றும் ஆளில்லா டிரோன்கள் உற்பத்திக்கு உதவுவதாக கூறி ஈரான், சீனா, அரபு அமீரகம், துருக்கி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 32 நிறுவனங்கள் மீது அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் பொருளாதார தடை விதித்தது.
இந்திய நிறுவனம் ஒன்றின் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மராட்டியத்தை சேர்ந்த ரசாயன உற்பத்தி நிறுவனமான பார்ம்லேண் பிரைவேட் லிமிடேட் நிறுவனம் அரபு அமீரக நிறுவனத்துடன் இணைந்து ஏவுகணை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சோடியம் குளோரேட் மற்றும் சோடியம் பெர்குளோரேட் ரசாயனத்தை ஈரானுக்கு ஏற்றுமதி செய்வதாக தெரிவித்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 10:12:10 AM (IST)

இலங்கை ஈஸ்டர் தினக் குண்டுவெடிப்பு வழக்கு : உயர் அதிகாரிகள் இருவருக்கு மரண தண்டனை!
சனி 1, ஆகஸ்ட் 2026 11:15:09 AM (IST)

பாகிஸ்தானில் டிரோன் மூலம் குண்டு வீச்சு: 11 போலீசார் பலி, 15 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
வெள்ளி 31, ஜூலை 2026 12:55:12 PM (IST)

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் மீது சர்வதேசப் பிடிவாரண்ட்: ரஷ்யா அதிரடி நடவடிக்கை!
புதன் 29, ஜூலை 2026 4:46:39 PM (IST)

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு - மீட்புப் பணிகள் தீவிரம்!
புதன் 29, ஜூலை 2026 12:04:25 PM (IST)

ஜெர்மனி ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோவில் திருவிழா: அதிபர் ஃபிராங்க்-வால்டர் ஸ்டெயின்மியர் பங்கேற்பு!
செவ்வாய் 28, ஜூலை 2026 4:21:10 PM (IST)


